பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scientific method

1287

scope


 படுத்தலுக்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறைப்படுத்தும் மொழி. ALGOL, FORTRAN, APL போன்றவை இவ்வகையின. செய்முறைப்படுத்தும் மொழிகள் அனைத்தும் இந்த வகைச் செய்முறைப்படுத்தலை அனுமதித்தாலும், ஒர் அறிவியல் மொழியிலுள்ள கட்டளைகள், இந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதை எளிதாக்குகின்றன.

scientific method : அறிவியல் முறை : ஒருவகைப் பகுப்பாய்வு முறைமையியல். இதில், உணர்ந்தறியும் நிகழ்வு, அந்த நிகழ்வின் காரண காரியங்கள் பற்றிய ஒரு முற்கோளை (Hypothesis) வகுத்தமைத்தல், பரிசோதனை மூலம் அந்த முற்கோளைச் சோதனை செய்தல், அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளைக் கணித்தறிதல், அந்த முற்கோள் பற்றி முடிவுகள் எடுத்தல் ஆகியவை உள்ளடங்கும்.

scientific notation : அறிவியல் குறிமானம்; அறிவியல் குறியீடு : எண்கள் ஒரு குறிப்பிட்ட இலக்குப் பகுதியாக அல்லது பொருத்தமான 10-இன் வர்க்கத்தின் அல்லது விசைக் குறி எண்ணின் மடக்கையின் பதின்மான மடங்குகளாக எழுதப்படுகிற குறிப்பான முறை. எடுத்துக்காட்டு : 0. 32619x107 அல்லது 0. 32619E+07 = 32, 61, 900.

sci. newsgroups : அறி. செய்திக் குழுக்கள், சை. நியூஸ்குரூப்ஸ் : sci. (அறிவியல்) என்று தொடங்கும், யூஸ்நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழுக்களைக் குறிக்கும்.

scissoring : கத்தரித்தல் : பயன்படுத்துவோரின் குறிப்பிட்ட எல்லைகளில் அமைந்துள்ள காட்சிச் சாதனத்தில் ஒரு வடிவமைப்பின் பகுதிகளைத் தானாகவே அழித்துவிடுதல் அல்லது வெட்டிவிடுதல்.

SCM : எஸ்சிஎம் : கணினி மருத்துவக் கழகம் எனப் பொருள்படும் Society for Computer Medicine என்ற ஆங்கிலத்தொடரின் குறும்பெயர். இந்தக் கழகம், மருத்துவப் பயன்பாடுகளில் தானியக்க முறையைப் பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக மருத்துவர்களையும் கணினி அறிவியலாளர்களையும் ஒருங்கிணைக்கிறது.

scope : காட்சிப் பரப்பு ; நோக்கெல்லை; செயல் எல்லை : ஒரு