பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

screen prompt

1291

scroll


screen prompt : திரை நினைவூட்டு : பயனாளர் துல்லியமாகவும், முழுமையாகவும் தரவுகளை உட்பாடு செய்வதற்கு உதவுகிற ஒளிக்காட்சித்திரையின் மீது காட்சியாகக் காட்டப்படும் ஓர் அறிவுறுத்தம்.

screen saver : திரைக் காப்பு : பல கணினிகளில் ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்குச் சுட்டு நுண் பொறியை நகர்த்தாமல் அல்லது ஒரு விசைப்பலகை விரற்கட்டையை அழுத்தாமல் இருக்கும்போது திரையில் தோன்றும் ஒரு நகரும் படம் அல்லது தோரணி.

திரைக் காப்பு

screen size : திரை வடிவளவு : திரையளவு : ஓர் ஒளிப்பேழைக் காட்சி திரை காட்டக்கூடிய தகவல்களின் அளவு. திரைகளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப்போல் மூலைவிட்டமாகவோ, கிடைமட்ட மற்றும் கிடைமட்ட புள்ளிகளின் அல்லது எழுத்துகளின் எண்ணிக்கையாகவோ அளவிடலாம்.

screen update : திரைப் புத்தாக்கம், திரைப் புதுப்பி : புதிய தகவல்களைப் பிரதிபலிப்பதற்காகத் திரையின் உள்ளடக்கங்களை மாற்றும் செய்முறை.

Scripsit : எழுத்து அடை : ரேடியோ ஷாக் TRS&80 நுண்கணினிப் பொறியமைவுகளில் சொற்களைச் செய்முறைப்படுத்துவதற்கெனப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுதி.

scripting language : உரைநிரல் மொழி : ஒரு குறிப்பிட்ட பயன்பாடு அல்லது செயல்கூறோடு தொடர்புடைய தனிச் சிறப்பான அல்லது வரம்புறு பணிகளை ஆற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஓர் எளிய நிரலாக்க மொழி. பெரும்பாலும் வலைப் பக்கங்களை வடிவமைக்கும் ஹெச்டீஎம்எல் ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது.

scripts : எழுத்துகள் : நிகழ்வுகளின் வரிசை முறையினைக் குறிக்கும் ஸ்கீமா போன்ற கட்டமைப்பு.

scroll : நகர்த்து; உருட்டு.