பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scrollable

1292

scroll lock key


scrollable field : சுருட்டத்தக்க புலம் : ஒரு சிறிய காட்சிப் பரப்பில் பெருமளவுத் தகவல்களைக் காட்சியாகக் காட்டுவதற்கு அல்லது தொகுப்பதற்கு அனு மதிப்பதற்காகச் சுருட்டக் கூடிய திரையி லுள்ள குறுகிய வரி.

scroll arrow : சுருள் அம்பு : மேலும், கீழும், இடமும் வலமும் நகர்த்திச் சுட்டிக்காட்டுகிற உருவம். இணையான திசையில் திரையைச் சுருட்டுவதற்காக இது இயக்கப்படுகிறது.

scroll bar : உருள்பட்டை : சில வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில் திரைக்காட்சிப் பரப்பின் அடிப்பக்கத்திலும் பக்கவாட்டிலும் முறையே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் தோற்றமளிக்கும் பட்டைகள். சுட்டியின்மூலம் அவற்றின்மீது சொடுக்கி, திரைக்காட்சியில் மேலும் கீழும், பக்கவாட்டிலும் நகர்ந்து, முழுத்தோற்றத் தையும் பார்வையிட முடியும். சுருள் பட்டைகளில் நான்கு பகுதிகள் உள்ளன. இரு முனைகளிலும் முக்கோணப் புள்ளிகள். அதன் மீது அழுத்தினால் ஒவ்வொரு வரியாக நகரலாம். பட்டையின் மீது ஒரு சிறியபெட்டி. ஏதேனும் குறிப்பிட்ட இடத்துக்கு நகர்த்தலாம். பட்டையில் பெட்டியில்லா இடத்தில் சொடுக்கி பக்கம்பக்கமாய் நகரலாம்.

scroll bar arrows : பட்டை அம்புக்குறிகள்.

scrolling : திரை சுழலல் : சுருளாக்கம்; சுழற்றுதல் : ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தரவுகளை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல்நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்பகுதியில் ஒரு புதிய வரி தோன் றும்;உச்சிப் பகுதியில் பழைய வரி மறையும். தரவுகளை வலமிருந்து இடமும், இடமிருந்து வலமும் கீழ் நோக்கியும் நகர்த்தும் திறனையும் இது குறிக்கிறது.

scroll lock : திரைச்சுழல் பூட்டு.

scroll lock key : சுருள் பூட்டு விசை : ஐபிஎம் பீசி/எக்ஸ்டீ மற்றும் ஏடீ ஒத்தியல்பு விசைப்பலகை களில் எண்விசைத் திண்டின் மேல்வரிசையில் அமைந்திருக்கும். திரைக்காட்சி மேலும் கீழும் பக்கவாட்டிலும் சுருளும் தன்மைகளைக் கட்டுப் படுத்தும். சிலவேளைகளில் திரையின் உருள் தன்மையைத் தடுக்கும். மெக்கின்டோஷ் விசைப் பலகைகளில் மேல் வரிசையில் பணிவிசைகளுக்கு