பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SCSI

1293

SCSI device



வலப்புறம் அமைந்திருக்கும். நவீனப் பயன்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலானவை இந்த சுருள்பூட்டு விசையைப் புறக்கணிக்கின்றன.

scs : ஸ்கஸ்ஸி : சிறு கணினி அமைப்பு இடைமுகம் என்று பொருள்படும் Small Computer System interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும் பெயர். அமெரிக்க தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (American National Standards Institute) அமைத்த எக்ஸ் 3டீ9. 2 (X3T9. 2) குழுவினர் வரையறுத்த அதிவேக இணைநிலை இடை முகத்துக்கான தர வரை யறை. நிலைவட்டுகள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற கணினிகள், குறும்பரப்புப் பிணையங்கள் போன்ற ஸ்கஸ்ஸி புறநிலைச் சாதனங்களை ஒரு நுண் கணினியில் இணைப்பதற்காக ஸ்கஸ்ஸி இடைமுகம் பயன்படுகிறது.

SCSI bus : ஸ்கஸ்ஸி பாட்டை : ஸ்கஸ்ஸி சாதனங்களிலிருந்து ஸ்கஸ்ஸி கட்டுப்படுத்திக்கு தரவுகளையும் கட்டுப்பாட்டு சமிக்கைகளையும் சுமந்து செல்லும் ஓர் இணைநிலைப் பாட்டை.

SCSI chain : ஸ்கஸ்ஸி சங்கிலி : ஸ்கஸ்ஸிப் பாட்டையிலுள்ள சாதனங்கள். ஒவ்வொரு சாதன மும் (புரவன் தகவியும் (Host Adapter) கடைசி சாதனமும் தவிர இரண்டு வடங்கள் மூலம் வேறு இரு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெய்ஸி சங்கிலி போன்று தோற்றமளிக்கும்.

SCSI connector : ஸ்கஸ்ஸி இணைப்பி : ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தை ஒரு ஸ்கஸ்லிப் பாட்டையில் இணைக்கும் ஒரு வட இணைப்பி.

SCSI device : ஸ்கஸ்ஸி சாதனம் : கணினி யின் மையச்செயலகத்துடன் தரவுகளையும் கட்டுப் பாட்டு சமிக்கைகளையும் பரிமாறிக் கொள்ள ஸ்கஸ்ஸி தர