பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SCSI

1294

SDLC


வரையறைகளைப் பயன்படுத்தும் ஒரு புறநிலைச் சாதனம்.

SCSI ID : ஸ்கஸ்ஸி ஐடி : ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தைத் தனித்து அடையாளம் காட்டும் குறியீடு. ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனமும் வெவ்வேறு ஸ்கஸ்ஸி ஐடி-க்களைக் கொண்டிருக் கும். ஒரே ஸ்கஸ்லிப் பாட்டையில் உச்ச அளவாக எட்டு ஸ்கஸ்ஸி ஐடி-க்களை வைத்துக் கொள்ள லாம்.


SCSI network : ஸ்கஸ்ஸிப் பிணையம் : ஒரு ஸ்கஸ்லிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு குறும் பரப்புப் பிணையம்போலச் செயல்படும்.


SCSI port : ஸ்கஸ்ஸிப் துறை : கணினிக்குள்ளேயே இருக்கும் ஒரு ஸ்கஸ்ஸி புரவன் தகவி (Host Adapter) ஸ்கஸ்ஸித் துறை எனப்படுகிறது. கணினிக்கும் ஸ்கஸ், ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாதனங்களுக்கும் இடையே ஒரு தருக்கநிலை இணைப்பைத் (logical connection) தருகிறது.


s-curve : எஸ்-வளைவு : ஆட்களுக்கெதிராக நேரத்தை வரைகிற வளைவு. இது ஆதார ஒதுக்கீட்டினைச் சமனப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரங்களைச் சீரமைவு செய்வதற்கு ஆள் பலத்தைப் படிப்படியாகக் குறைப்பதற்கு இது உதவுகிறது.


scuzzy : ஸ்கஸ்ஸி ; SCSI-க்கு மற்றொரு பெயர்.


. sd : . எஸ்டி : ஒர் இணைய தள முகவரி சூடான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


SDK : எஸ்டிகே : மென்பொருள் உருவாக்கக் கருவித்தொகுதி எனப் பொருள்படும் Software Development Kit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து நிரல்கள், செயல்கூறுகள், மொழி மாற்றி, நிரல் திருத்தி போன்ற அனைத்துக் கருவிகளும் அடங்கிய மென்பொருள் தொகுப்பு.


SDLC : எஸ்டிஎல்சி : 1. ஒத்திசைத் தரவு தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architecture) அடிப்படையில் செயல்படும்