பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

second, micro

1298

sector interleave


கணினிகள்; கணினிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த கணினிகள். இதில் வெற்றிடக் குழாய்க்குப் பதில் மின்மப் பெருக்கி (டிரான்சிஸ் டர்) பயன்படுத்தப் பட்டது. இவ்வகைக் கணினிகள் 1959 முதல் 1964 வரை ஆதிக்கம் பெற்றிருந் தன. பிறகு இவற்றுக் குப் பதில் ஒருங் கிணைந்த மின்சுற்று நெறியைப் பயன் படுத்தும் கணினிகள் பயனுக்கு வந்தன.

second, micro : மைக்ரோ விநாடி.

second source : துணை ஆதாரம்; இரண்டாம் ஆதாரம்; இரண்டாம் மூலம் : மற்றொரு உற்பத்தியாளரின் உற்பத்திப் பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடிய ஒரு பொருளைத் தயாரிக்கும் உற் பத்தியாளர்.

secret codes : இரகசியக் குறியீடுகள்.

secret key : மறைக்குறி; மறைத் திறவி.

section : பிரிவு.

sector : வட்டக்கூறு; பிரிவு; பகுதி : இருபுறமும் ஆன எல்லையுடைய வட்டக்கூறு. ஒரு வட்டு மேற்பரப்பு இத் தகைய வட்டக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வட்டக்கூறு

sector interleave : வட்ட க்கூறு இடை இணைப்பு : ஒரு நிலை வட்டு வட்டக்கூறு இலக்க மிடுதல். ஒன்றுக்கு ஒன்று (1 : 1) என்ற இடை இணைப்பு வரிசை முறையில் அமைந்தது : 0, 1, 2, 3 முதலியன. இரண்டுக்கு ஒன்று (2 : 1) என்ற இடை இணைப்பு அடுத்த வட்டக்கூறு. ஒவ்வொன்றும் இரண்டாவதாக இருக்கும் வகையில் வட்டக் கூறுகளை மாறுபட அமைக் கிறது. 0, 4, 1, 5, 2, 6, 3, 7. ஒன்றுக்கு ஒன்று (1 : 1) என்ற இடை இணைப்பில், வட்டக் கூறிலுள்ள தரவு படிக்கப்பட்ட