பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ballistic gain

129

bank


பின்னோக்கி வரக்கூடிய நான்கு செயல் முறைகளையுடைய முதல் கணிப்பியை இவர் 1875இல் அமெரிக்காவில் கண்டுபிடித்தார்.

ballistic gain:செலுத்து வினை ஆதாயம்:கட்டி அல்லது கோளச் சுட்டியின் கைவேகத்தை ஒட்டி சுட்டி பயணம் செய்யும். சுட்டியின் கோளம் வேகமாக ஒடினால்,திரையில் சுட்டியும் அதைவிட அதிக தூரம் நகரும்.

balloon help:பலூன் உதவி:குறிப்பிட்ட பொருளின்மீது சுட்டியில் சொடுக்கும்போது,கார்டூன் பாணியில் திரையில் காட்டப்படும் உரையாடல் பெட்டி. மெக்கின்டோஷில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

ball printer:கோள அச்சுப் பொறி:மீண்டும் மாற்றக் கூடிய பந்து வடிவ அச்சு முனை உள்ள அச்சுப்பொறி. அச்சுப் பந்தினை மாற்றுவதன் மூலம் அச்சு எழுத்துகளை மாற்ற முடியும்.

band:கற்றை:தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள். பட்டை அச்சுப்பொறியால் அச்சிடும் சாதனம். band pass filter:கற்றை அனுப்பும் வடிகட்டி:மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட அலை வரிசையை மட்டும் செல்ல அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கும்.

band printer:கற்றை அச்சுப் பொறி:எழுத்துகளின் தொகுதியை எடுத்துச் செல்வதற்கு இரும்பு வரிப் பட்டை அல்லது பாலியுரேத்தேன் பெல்ட்டைப் பயன்படுத்துகின்ற அழுத்தும் அச்சுச் சாதனம். ஒரு நிமிடத் திற்கு 300 முதல் 2, 000 வரிகள் வரையிலான வேகத்தில் அச்சிடுவதுடன் பல கார்பன் பிரதிகளையும் இதனால் தரமுடியும்.

bandwidth:கற்றை அகலம்:செய்தித் தகவல் தொடர்புகளில் அதிக அலைவரிசைக்கும்,குறைந்த அலைவரிசைக்கும் உள்ள வேறுபாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்னும் அளவை முறையில் ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தைக் குறிப்பிடுவது.

bandwidth on demand:தேவைக்கேற்ற அலைக் கற்றை: தொலை தொடர்பில் ஒரு தகவல் தடத்தில் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கும்போது, அத்தகவல் பரிமாற்றத்தின் தேவைக்கேற்ப கையாள் திறனை அதிகரித்துக் கொள்ளுதல்.

bank:வங்கி:1. தகவல் தொடர்புகளில்,இரண்டு