பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sel

1303

selector channel



வரையறுத்துக் கூறும் ஓர் எண். இது பத்தி எண் என்றும் கூறப்படும். 

sel (SELect) : எஸ்சிஎல் (செலெக்ட்) : அச்சுப் பொறி மாற்றி மாற்றித் தொடு நிலைக் கும் விடுநிலைக்கும் எடுத்துச் செல்லும் அச்சுப்பொறி

select : தெரிவு ; தேர்ந்தெடு ; தெரிவு செய் : பயனாளரின் குறிப்பிட்ட வரையளவுகளுக் கேற்ப தரவுத் தளத்திலிருந்து பதி வேடுகளின் தொகுதியைத் தெரிவு செய்தல். எடுத்துக் காட்டு : 1986-க்கு மேற்பட்ட ஆண்டுக்கான பதிவேடுகள் அனைத்தையும் தெரிவுசெய்தல்.

select all : அனைத்தும் தேர்ந் தெடு.

select all records : அனைத்து ஏடுகளையும் தேர்ந்தெடு.

selecting : தெரிவு செய்தல்.

selection control structure : தேர்வுக் கட்டுப்பாட்டமைப்பு.

selector : தெரிந்தெடுப்பி.

selection : தெரிவு செய்தல் : தேர்வு : மாற்று முறைகளி லிருந்து தேர்ந்தெடுத்தல்.

selection sort : தெரிவுப் பிரிப்பி; தேர்ந்து பிரித்தெடு ; தேர்வு வரிசை : ஒரு பட்டியலிலுள்ள மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய மதிப்பளவு களைத் தேர்வு செய்து பட்டி யலைச் சுருக்குவதற்கான பிரிப்பி.

selection structure : தெரிவுக் கட்டமைப்பு ; ஒரு கட்டமைப்புப் பாய்வு வரைபடத்தின் மூன்று அடிப்படைக் கட்டமைப்பு களில் ஒன்று. சில நிபந்தனை களின் பேரில் இருமாற்று வழி களுக்கிடையே தேர்வு செய்ய உதவுகிறது. இதனை 'முடிவுக் கட்டமைப்பு' என்றும் கூறுவர்.

selective calling : தெரிவுப் பணி; செய்தித் தொடர்புகளில் இணையத்திலுள்ள எந்த நிலையம் செய்தியைப் பெற வேண்டும் என்பதைத் தெரிவிப் பதற்கு அனுப்பீட்டு நிலையத் திற்குள்ள திறன்.

selector channel : தெரிந் தெடுப்பு வழி; தேர்ந்தெடுக்கும் வழித் தடம் : தெரிவுத் தடம் : சில வகைக் கணினி பொறி யமைவுகளில் உள்ள உட் பாட்டு / வெளிப்பாட்டு வழி. இதன்மூலம் தரவுகளை ஒரு புறநிலை சாதனத்தில் மட்டுமே ஒரே சமயத்தில் தரவுகளை ஏற்றவும் அதிலிருந்து மாற்றவும் செய்யலாம். இது 'பன்முக வழி' என்பதிலிருந்து வேறு பட்டது.