பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

semiconductor field

1307

Sendmail


தூய உலோகத்தின் படிகக் கட்டமைவில் ஆர்செனிக் போன்ற மாசு அணுக்கள் உட்செல்லுமானால் மின்னியல் சமநிலை சீர்குலைகிறது. நேர்மின் அல்லது எதிர்மின்னேற்ற ஊர்திகள் உண்டாகின்றன. அப்போது டயோடுகளும் மின்மப்பெருக்கிகளும் புகுத்தப்படுகின்றன.

semiconductor field : அரைக்கடத்திப் புலம்.

semiconductor memory : அரைக் கடத்தி நினைவகம்.

semiconductor secondary storage (RAM disk) : அரைக்கடத்தி துணை நிலைச் சேமிப்பகம் (வட்டு ) : கணினியின் அரைக் கடத்திச் சேமிப்பகத்தின் பகுதியை ஒரு வட்டு இயக்கியாக இருந்தாற்போறு செயற்படச் செய்கிற முதன்மைச் செய்முறைப்படுத்தியாகவும், செயற்பாட்டு பொறியமைவாக அமைக்கிற மென்பொருள் மற்றும் கட்டுபாட்டு சுற்று நெறியைப் பயன்படுத்துகிற ஒரு முறை.

semiconductor storage : அரைக்கடத்திச் சேமிப்பகம் : ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புவில் திடநிலை மின்னணு அமைப்பிகளாகஅமைந்துள்ள சேமிப்புப் பொருள்களைக் கொண்டுள்ள நினைவகச் சாதனம்.

semi instructured decisions : அரைகுறை முடிவுகள் : ஒரு பகுதி முன்னரே குறித்து வைக்கப்பட்டிருந்து, ஆனால் ஒரு திட்டவட்டமான பரிந் துரைத்த முடிவுக்கு வழி செய்யாத நடைமுறைகள் அடங்கிய முடிவுகள்.

semirandom access : அரை தற்செயல் அணுகல்;பகுதி நேரடி அணுகல்; பாதி குறிப்பற்ற அணுகுமுறை : விரும்பிய இனத்தைத் தேடுவதில் ஒரு வகை நேரடி அணுகுமுறையை இணைக்கிற ஒரு சேமிப்பில் தரவுகளைக் கண்டறியும் முறை.

send : அனுப்பு : தகவல் தொடர்புத் தடத்தின் வழியாக ஒரு செய்தியை அல்லது கோப்பினை அனுப்பி வைத்தல்.

send to : இவருக்கு அனுப்பு.

send to back : திருப்பி அனுப்பு.

send later : பின்னர் அனுப்பு.

sendmail : அனுப்பு அஞ்சல்;செண்ட் மெயில் : மின்னணு அஞ்சலைக்

(e-mail) கையாள்வதற்குரிய ஒரு தர அளவான UNIX செயல்முறை. இதனை நிறுவுவது கடினம். அப்படி