பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

send now

1308

sensor glove


நிறுவினாலும், பல பாதுகாப்பு அபாயங்களுக்கு இடந்தருகிறது. இதில் அடிக்கடித் தவறுகள் நிகழ்வதால் சேய்மைப் பொறிகளை அணுக இடமளித் துக் குழப்பம் உண்டாக்குகிறது.

send now : இப்போது அனுப்பு.

sender : அனுப்புநர்.

send Statement : அனுப்பு கூற்று;அனுப்பு கட்டளை : ஸ்லிப் (SLIP), பீபீபீ (PPP) நெறிமுறைகளில், இணையச் சேவையாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சில குறிப்பிட்ட குறியீட்டெழுத்துகளை அனுப்புமாறு எழுதப்பட்ட கூற்று/கட்டளை.

sense : உணர்வுத்திறம்;உணர் : 1. ஒரு வகைப்பாட்டின் குறிப்பிட்ட தொடர்பாட்டினை ஆராய்தல். 2. வன்பொருளின் சில கூறுகளின் தற்போதைய அமைப்புமுறையைத் தீர்மானித்தல். 3. ஒர் அட்டையில் அல்லது நாடாவில் துளையிடப் பட்ட துவாரங்களைப் படித்தல்.

sense probe : உணர்வு ஆய்வு;உணர்வி : ஒரு காட்சித் திரையில் உணர்வுப் புள்ளிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் ஒரு கணினியில் உட்பாடு செய்கிற உட்பாட்டுச் செயல்முறை.

sense switch : உணர்வு விசை;உணர் பொத்தான் : கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறையில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும்.

sensitive devices : உணர்வுச் சாதனங்கள்.

sensitivity : உணர்வுத் திறன் : உள்வரும் சைகையில் ஏற்படும் மாறுதலுக்கு ஒரு கட்டுப்பாட்டின் உணர் திறன் அளவு.

sensitivity analysis : உணர் திறன் பகுப்பாய்வு : ஒரு கணித உருமாதிரியில் தனியொரு மாறிலியில் அடிக்கடி செய்யப்படும் மாறுதல்கள் எவ்வாறு ஏனைய மாறிலிகளைப் பாதிக்கின்றன என்று கண்காணித்தல்.

sensor glove : உணரிக் கையுறை : மெய்நிகர் நடப்புச் சூழல்களுக்கு, கையில் அணிந்து கொள்ளும் கணினி உள்ளிட்டுச் சாதனம். பயனாளரின் கைவிரல் அசைவுகளை இந்தக் கையுறை, சுற்றுச்சூழல் இருக்கும் பொருள்களை இயக்குவதற்குரிய கட்டளைகளாக மாற்றியமைக்கும்.

தரவுக் கையுறை (data glove) என்றும் அழைக்கப்படும்.