பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bank, data

130

banner page


குறிப்பிட்ட எல்லைகளுக்கிடையிலான அலைவரிசைகளின் பரப்பு. 2. செயல்பாட்டின் பரப்பு அல்லது தன்மை 3. வட்டு அல்லது உருளை போன்ற இருமுக சாதனத்தில் வட்டமான பதிவு செய்யும் வழித்தடங்களின் தொகுதி.

bank,data:தரவு வங்கி;தகவல் வங்கி.

banked memory:சேமிக்கப்பட்ட நினைவகம்:வழக்கமான 64 கே ரேம் நினைவகத்தை அதிகப்படுத்தும்முறை. முகவரியிடலில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க 8 துண்மி நுண் செயலகங்களில் இருந்து மேலும் பெரிய அளவுள்ளவற்றுக்கு பொதுவாக 1 மெகா பைட் உள்ளவற்றுக்கு முகவரியிடுவது 64. கே. வுக்கு மேல் உள்ள அட்டைகள் தேவைப்படும்போது மட்டும் மென்பொருள் கட்டுப்பாட்டின் மூலம் தொடங்கப்படும்.

banking software:வங்கி பணி மென்பொருள்.

banking through telephone:தொலைபேசி வழி வங்கிப் பணி.

bank switching:தடு இணைபபாக்கம்:மின்னணு மின்சுற்றுகளை ஏற்படுத்துதல்,நிறுத்துதல்,மற்ற அலகுகள் நிறுத்தப்படும்போது ஒன்று மட்டும் செயல்படும். தேவையுள்ள முறையில் எல்லா மின்சுற்றுகளையும் முகவரியிடுவதையோ,இயக்கப்படுவதையோ தடுக்கும் கணினி அமைப்பின் வடிவமைப்பு.

banner:பட்டிகை;பதாகை:1. இணையத்தில் வலைப் பக்கத்தின் ஒரு பகுதியில் தோன்றும் விளம்பரப்பட்டிகை. பெரும்பாலும் ஒர் அங்குல அகலத்தில்,வலைப்பக்கத்தின் நீளத்தில் காணப்படும். விளம்பரப்படுத்தப் பட்டுள்ள நிறுவனத்தின் வலைத் தளத்துக்கு அப்பட்டிகையில் ஒரு தொடுப்பு இருக்கும். 2. யூனிக்ஸ் இயக்க முறையில் உள்ள கட்டளை. கணினித் திரையின் ஒரு வரியில் 10 எழுத்துகளில் விதம் பெரிய எழுத்துகளில் செய்திகளைத் திரையிடலாம்.

banner page:பட்டிகைப் பக்கம்:பெரும்பாலான அச்சு மென்பொருள்

களால் ஒவ்வொரு அச்செடுப்பின்போதும் சேர்த்துக் கொள்ளப்படும் முகப்புப்பக்கம். பயனாளர் அடையாளத் தகவல்,அச்சுப் பணீயின் அளவு, அச்சு மென்பொருளின் தகவல் ஆகியவற்றை இப்பக்கம் கொண்டிருக்கும். ஒரு அச்சுப் பணியை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்திக்காட் இப்பக்கம் பயன்படும். 2. மென் பொருள் தொகுப்புகளில் தொடக்கத்தில்