பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sensors

1309

sequential access


sensors : உணர்விகள் : வெப்ப நிலை, அழுத்தம், இதயத் துடிப்பு, காற்றுத் திசை, நெருப்பு போன்ற இயற்பியல் மாறுதல்களைக் கண்டறிந்து அளவிடக்கூடிய சாதனம். இயற்பியல் தூண்டல்களை மின்னணுச் சைகைகளாக மாற்றுகின்றன. எடுத்துக்காட்டு : கணினிகளில் உட்பாட்டினைச் செலுத்துதல்.

SEPP : எஸ்இபீபீ : இணை நிலைச்செயலாக்கத்துக்கான மென்பொருள் பொறியியல் எனப் பொருள்படும் Software Engineering for Parallel Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பகிர்ந்தமை நினைவக பல்செயலி களுக்கான இணைநிலைப் பயன்பாட்டு நிரல்களை உருவாக்குவதற்குரிய கருவிகளை உருவாக்க, ஒன்பது ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட ஒரு திட்டப்பணி.

sequence : வரிசை முறை : 1. ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கிணங்க இனங்களை வரிசைப் படுத்துதல். 2. எண்மான வரிசை முறையில் ஏறுமுக வரிசை.

sequence character : தொடர் எழுதது.

sequence check : வரிசை முறைச் சரிபார்ப்பு;வரிசைச் சோதனை : ஒரு தரவு தொகுதி ஏறுமுக வரிசையில் அல்லது இறங்குமுக வரிசையில் அமைந்திருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும் முறை.

sequence of members : எண் வரிசை முறை.

sequence structure : வரிசை முறைக் கட்டமைப்பு : வரிசை அமைவு ஒரு கட்டமைவு பாய்வு வரைபடத்தின் அடிப்படையான மூன்று கட்டமைப்பு களில் ஒன்று. இதில் நிரல்கள் வரிசைமுறையில் நிறை வேற்றப்படுகின்றன.

sequential : வரிசை முறையிலான;வரிசைமுறை சார்ந்த தொடர்வழி; வரிசைமுறை : கால முறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்வது தொடர்பானது. இதில் நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுவதோ, ஒன்றின் மீதொன்று நிகழ்வதோ இல்லை.

sequential access : வரிசை முறை அணுகுதல்;தொடர்வழிச் சேர்வு; வரிசை அணுகுமுறை : சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை.