பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sequential flow of

1311

serial access


கோப்புகளை அமைத்து வைத்தல். வரிசைமுறைக் கோப்புகளிலுள்ள பதிவேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்முறைப்படுத்தப்பட வேண்டும்.

sequential flow of control : வரிசைமுறைக் கட்டுப்பாட்டுத் தொடர்வரிசை.

sequential list : வரிசை முறைப் பட்டியல் : பக்க அமைவிடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டியல். இதனைச் செறிவுப்பட்டியல், நீட்சிமுறைப் பட்டியல் என்றும் கூறுவர்.

sequential logic : வரிசை முறைத் தருக்கம்;வரிசைமுறை அளவை : உட்பாட்டின் முந்திய நிலைமூலம் வெளிப்பாட்டு நிலை தீர்மானிக்கப்படுகிற சுற்றுவழி அமைப்புமுறை. இது இணைத் தருக்கம் என்பதிலிருந்து மாறுபட்டது.

sequential logic element : வரிசைமுறைத் தருக்க உறுப்பு : குறைந்த அளவாக ஒரு உள்ளீடு, ஒரு வெளியீடு மட்டுமாவது உள்ள ஒரு தருக்க மின்சுற்று உறுப்பு. இதன் வெளியீட்டு சமிக்கை, உள்ளிட்டு சமிக்கை அல்லது சமிக்கைகளின் இப்போதைய மற்றும் முந்தைய நிலைகளின் அடிப்படையில் இருக்கும்.

sequential machine : வரிசை முறை எந்திரம் : வரிசைமுறை விசைச் சுற்றுவழியின் ஒரு குறிப்பிட்ட வகையின் கணித உருமாதிரி.

sequential pattern of excution : வரிசைமுறை நிறைவேற்றம்.

sequential processing : வரிசை முறை செயலாக்கம்; வரிசை முறை செய்முறைப்படுத்தல் : வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை முறையின்படி கோப்புகள் இயக்குதல் direct access processing, random processing என்பதற்கு எதிர்ச் சொல்.

sequential storage : வரிசை முறைச் சேமிப்பகம்;தொடர் வழிச்சேகரம் : தரவுகள் ஏறுமுக அல்லது இறங்குமுக எண் வரிசையில் அமைக்கப் பட்டுள்ள துணைநிலைச் சேமிப்பகம்.

serial : தொடர்வரிசை தொடர்;தொடராக : 1. தனியொரு சாதனத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தொடர்புடைய நடவடிக்கைகள் வரிசை முறையில் நிகழ்தல். இது இணை நிகழ்விலிருந்து மாறுபட்டது.

serial access : தொடர்வரிசை அணுகுதல்;வரிசை அணுகு முறை : சேமிப்பகத்தில் அணுகு நேரத்திற்கும் தரவு அமைவிடத்திற்குமிடையில்

ஒரு