பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

serial input/output

1313

serial port


புறச்சாதனங்களுக்கும் பயன்படுகின்றன.

serial input/output : தொடர்வரிசை உட்பாடு/வெளிப்பாடு;தொடர் நிலை உள்ளீடு/வெளியீடு : துண்மிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒற்றைக் கம்பி மூலம் அனுப்பப்படுகிற தரவு அனுப்பீடு. இது இணை உட்பாடு/ வெளிப்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது.

serial interface : தொடர்வரிசை இடைமுகப்பு;தொடர்நிலை இடைமுகம் : தரவுகள் அனைத்தும் துண்மி துண்மியாகத் தொடர்வரிசையில் நகர்கிற இடைமுகப்பு. இது இணை இடைமுகப்பு என்பதிலிருந்து மாறுபட்டது.

serializability : நேரியலாக்கு இயலுமை;தொடர்வரிசைப் படுத்தும் திறன்;வரிசையாக்கப்படும் தன்மை : பல பயன்பாட்டாளர்கள் ஒரே சமயத்தில் தரவுகளை அணுகும்போது, அதன் பலன், அவர்கள் ஒரே சமயத்தில் ஒருவராக அணுகும்போது நிகழும் பலனுக்கு நிகராக இருத்தல் வேண்டும். இந்த விளைவு'தொடர் வரிசைப் படுத்தும் திறன்'எனப்படுகிறது.

serialize : நேரியல்படுத்து : பைட் பைட்டாக அனுப்பப்படும் இணை நிலை தகவல் பரிமாற்றத்தை, துண்மி துண்மியாக (பிட் பிட்டாக) அனுப்பப் படும் நேரியல் முறையாக மாற்றியமைத்தல்.

Serial Keys : நேரியல் விசைகள் : விண்டோஸ் 95ல் இருக்கும் ஒரு பண்புக் கூறு. தகவல் தொடர்பு, இடைமுகச் சாதனங்களைப் பொறுத்தமட்டில் விசையழுத்தங்களும், சுட்டிச் சமிக்கைகளும் கணினியின் நேரியல் துறை (serial port) வழியாகவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

serial machine : நேரியல் பொறி.

serial mouse : நேரியல் சுட்டி : கணினியின் வழக்கமான நேரியல் துறையில் இணைக்கப் படும் ஒரு சுட்டுச் சாதனம்.

serial operationதொடர் வரிசைச் செயற்பாடு;தொடர் நிலை இயக்கம் : ஒரு சொல்லின் இலக்கங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் அல்லாமல் வரிசை முறையில் கையாளப்படுகிற கணினிச் செயற்பாடு. இது இணைச் செயற்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது.

serial port : தொடர்வரிசைத் துறை;தொடர்நிலைத் துறை;வரிசை; இணைப்பு : ஒரே சமயத்தில் ஒரு துண்மி வீதம் தரவுகளை ஏற்கவும் அனுப்ப