பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

serial port adapter

1314

series circuit


வும் பயன்படுத்தப்படும் கணினியின் உட்பாட்டு/வெளிப்பாட்டுத் துறை. பெரும்பாலான சொந்தக் கணினிகளில், ஒரு RS-232C தொடர்வரிசை இடைமுகப்புத் துறை மூலம் தொடர்வரிசைத் தரவு செலுத்தப்படுகிறது.

serial port adapter : நேரியல் துறைத் தகவி : நேரியல் துறை அமைந்துள்ள, அல்லது தொடர்நிலைத் துறையை இன்னொன்றாக மாற்றியமைக்கின்ற ஒர் இடைமுக அட்டை அல்லது சாதனம்.

serial printer : தொடர்வரிசை அச்சுப் பொறி;வரிசை அச்சுப் பொறி, தொடர் நிலை அச்சுப் பொறி, தொடர் அச்சு எந்திரம் : ஒற்றைக் கம்பி வழியாக ஒரு சமயத்தில் ஒரு துண்மி வீதம் கணினியிலிருந்து தகவல்களைப் பெறுகிற அச்சடிப்பி. (ஒரு எழுத்து, எட்டு துண்மிகளுக்குச் சமம்). கட்டுப்பாட்டுச் சைகைகளைப் பரிமாற்றிக் கொள்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் கம்பிகள் தேவைப்படலாம். இது ஒரே சமயத்தில், 600 cps வேகத்தில் ஒரு எழுத்தை அச்சடிக்கிறது. இது இணை அச்சடிப்பி என்பதிலிருந்து வேறுபட்டது.

serial processing : தொடர்வரிசைச் செய்முறைப்படுத்துதல்;வரிசைச் செயலாக்கம்;தொடர் நிலைச்செயலாக்க்ம் : ஒரு கோப்பில் பதிவேடுகளை, அவை சேமித்து வைக்கப்பட்ட இயல்பான வரிசைமுறையில் ஒன்றன்பின் ஒன்றாகப் படித்தல் மற்றும்/அல்லது எழுதுதல். இது இணை செய்முறைப் படுத்தல் என்பதிலிருந்து வேறுபட்டது.

serial reading : தொடர்வரிசைப் படிப்பு;வரிசைமுறைப் படிப்பு;தொடர் நிலைப் படிப்பு : துளையிட்ட அட்டையிலிருந்து பத்தி பத்தியாகப் படித்தல். இது இணையாகப் படித்தல் என்பதிலிருந்து வேறுபட்டது.

serial transfer : நேரியல் பரிமாற்றம்.

serial transmission : தொடர்வரிசை;தொடர் நிலைச் செலுத்தம் : தரவுகளை மாற்றம் செய்வதற்கான ஒரு முறை. இதில், ஒர் எழுத்தினைக் கோர்க்கின்ற துண்மிகள் வரிசைமுறையில் அனுப்பப்படுகின்றன. இது, இணை அனுப்பீடு என்பதிலிருந்து வேறுபட்டது.

series : தொடர்கள்.

series circuit : வரிசை மின்சுற்று : இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளுறுப்புகள் வரிசையாகத் தொடுக்கப்பட்ட ஒரு மின்