பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Set

1318

setup


set : பொருத்துதல்;தொகுதி குழு : 1. ஓர் இருமச் சிற்றத்தை 1 நிலையில் வைத்தல்;2. ஒரு சேமிப்புச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத் தல். இது பெரும்பாலும் கழியாக இருக்கும். 3. தொடர்புடைய பொருள்களின் ஒரு தொகுதி. 4. ஒரு தொடர்புறு தரவுத் தளத்தில், பொருள்களின் தொகுதி. 5. ஓர் இணையத்தில்/படிமுறைத் தரவுத்தள உருமாதிரியில், ஒன்றும் பலவு மான தொடர்புகள். ஒரு பதிவு வகை இன்னொன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் வழி.

set block : கணத் தொகுதி : ஒரு செயல்முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவுகளின் அளவைச் சுருக்கமும் விரிவாக்கமும் செய்யக்கூடிய ஒரு DOS செயற்பணி.

set, data : தரவுக் கணம்.

set database password : தரவுத்தள நுழைசொல் அமை.

SETI : எஸ்இடீஎல் : தொகுதிகளும், தொடர்புடைய கட்டமைப்புகளும் உள்ளடங்கிய பதின்முறை எண்மானச் செயல் முறைப்படுத்துதலுக்கு வசதி செய்து கொடுக்க வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழி

set of instructions : நிரல்களின் தொகுதி.

set print area : அச்சுப்பரப்பு அமை.

set theory : கணக்கோட்பாடு : பொருள்களின் கணங்கள், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள்பற்றிய கணிதம் அல்லது தருக்க முறைப் பிரிவு. UNION, INTERSECT, COMPLEMENT ஆகியவை இதன் மூன்று அடிப்படைச் செயற்பாடுகள்.

settings : அமைப்புகள்.

settling time : நிலைநிற்கும் நேரம் : ஒரு வட்டு இயக்கத்திலுள்ள படி/எழுது முனை ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகரும்போது, புதிய இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்.

set-top box : மேல்நிலைப் பெட்டி : வடத் தொலைக்காட்சி சமிக்கைகளை தொலைக் காட்சிப் பெட்டியின் உள்ளிட்டு சமிக்கைகளாக மாற்றித்தரும் ஒரு சாதனம். தொலைக்காட்சி மூலமாக வைய விரிவலையில் உலாவர இத்தகு மேல்நிலைப் பெட்டிகள் பயன்படுகின்றன.

setup : நிறுவுகை;அமைப்பு முறை;அமைப்பு;அமைவு : ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு