பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

setup programme

1319

sfil


காண்பதற்கான தரவுகளின் அல்லது சாதனங்களின் அமைப்பு முறை.

setup programme : நிலைகொள் செயல்முறை : ஒரு பொறியமைவினை ஒரு குறிப்பிட்ட சூழலுக்கேற்ப உருவாக்குகிற மென்பொருள். சொந்தக் கணினிகளில் ஒரு பெரிய சாதன மாற்றத்தைச் செயற்பாட்டுப் பொறி யமைவுக்குத் தெரிவிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

setup string : நிலைகொள் சரம் : அச்சடிப்பி போன்ற ஒரு சாதனத்தைத் தொடக்கி வைக்கிற நிரல்களின் தொகுதி.

setup time : அமைப்பு முறை நேரம், அமைப்பு நேரம்;நிறுவு நேரம் : மற்ற எந்திரச் செயற்பாடுகளைக் கணினி இயக்கு வதற்கிடையிலான நேரம். அதாவது, வட்டுகள் நகரும் அட்டைகள், படிவங்கள், பிற பொருள்கள் ஆகியவற்றை சாதனத்திற்குள்ளேயும் வெளியேயும் மாற்றுவதற்கான நேரம்.

setup wizard : நிறுவுகை வழிகாட்டி : மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு புதிய மென்பொருளை நிறுவிடப் பயனாளருக்கு உதவிடும் ஒருநிரல். வரிசையாகக் கட்டமைக்கப்பட்ட வினாக்கள், விருப்பத் தேர்வுகள் மூலம் படிப்படியாக பயனாளரை இட்டுச் செல்லும் ஒரு வழிமுறை.

seven segment display : ஏழுகூறுக் காட்சி : எண்மானக் கடிகாரங்களில் காணப்படும் பொதுவான காட்சிமுறை. இது எட்டுகளின் ஒரு தொடர் போன்று தோன்றும் படிப்புமுறைகளையும் குறிக்கும். தனித்தனியாக முகவரியிடத்தக்க ஏழுபட்டைகள் வரையில் தெரிந்தெடுத்த ஒளிர்வு மூலம் ஒவ்வொரு எண் அல்லது எழுத்து அமைக்கப் படுகிறது.

. sf. ca. us : . எஸ்எஃப். சிஏ. யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு, கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான் சிஸ்கோவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sferics : ஸ்ஃபெரிக்ஸ் : வாயு மண்டல ஒசைகளைக் குறிக்கும் ஒரு சொல். செய்தித் தொடர்புக் கம்பியில் எந்த வகையான இடையீட்டையும் இது குறிக்கிறது.

sfil : எஸ்ஃபில் : மெக்கின்டோஷ் சிஸ்டம் 7இல் ஒலிக் கோப்புகளைக் குறிக்கும் கோப்பு வகைப் பெயர்.