பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

short-haul modern

1327

SHRDLU


தகவல் தொடர்புச் சாதனம் சமிக்கைகளை அனுப்புதல்.

short-haul modem : குறுகிய இழுவை மோடெம் : செய்தித் தொடர்களில், ஒரு மைல் தூரம் வரை சைகைகளை அனுப்புகிற சாதனம்.

shout : கூவு;சத்தமிடு;அழுத்தமாய்ச் சொல்;உரத்துச்சொல் : மின்னஞ்சல் அல்லது செய்திக் குழு கட்டுரைகளில் அழுத்தமாய்ச் சொல்ல விரும்பும் கருத்துகளை அனைத்தும் பெரிய எழுத்தில் தெரிவிப்பது. மிகையான சத்தமிடல் வலைப் பண்பாட்டுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. இரண்டு நட்சத்திரக் குறிகளுக்கிடையில் அல்லது இரண்டு அடிக்கீறு (underscore) களுக்கிடையில் குறிப்பிடுவதன் மூலம் கருத்துகளை உரத்துச் சொல்லலாம்.

shovelware : வாரியிடு பொருள்கள்;அள்ளித்தருபொருள்கள் : இணையத் தில் இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கின்ற மென்பொருள்கள், பகிர்வு மென்பொருள்களை ஒரு குறுவட்டில் (சிடிரோம் வட்டு) பதிவு செய்து விற்பது. இவற்றில் பெரும்பாலும் வரைகலைப் படிமங்கள், உரைப்பகுதிகள், சிறுசிறு பயன்கூறுகள் அல்லது பிற தரவுகள் இடம் பெறுவதுண்டு.

show auditing toolbar : தணிக்கைக் கருவிப்பட்டை காண்பி.

show clock : கடிகாரம் காண்பி.

show log : பதிகை காண்பி.

show small icons in start menu : தொடக்கப்பட்டியில் சிறுசின்னங் களைக் காண்பி.

show sounds : ஒலியைக் காட்டு : விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் காது கேளாதோருக்கு அல்லது இரைச்சலான தொழில் கூடங்களில் பணிபுரிபவருக்கென அமைந்துள்ள வசதி. பயனாளரின் கவனத்தைக்கவர சில பயன்பாட்டு நிரல்களில் ஒலியெழுப்புமாறு அமைத்திருப்பர். அவ்வாறு ஒலி எழுப்பப் படும்போதெல்லாம் கண்ணில் படும்படியாக ஒரு செய்திக் குறிப்பைத் திரையில் காட்சிப் படுத்துமாறு கட்டளையிட வசதியுள்ளது.

SHRDLU : எஸ்எச்ஆர்டிஎல்யூ;ஸ்ரட்லு : முதலாவது இயற்கையான மொழிச் செயல்முறை. இது, சொற்றொடர்பு, சொற்பொருள் பகுப்பாய்வினை