பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shrink-wrapped

1328

SI


உலகியல் அறிவுடன் ஒருங்கிணைக்கிறது.

shrink-wrapped : முடித்துக்கட்டியது : வணிக முறையில் வினியோகம் செய்யத் தயாராக பெட்டியில் போட்டு முத்திரை யிடப்பட்டு விற்பனைக்கு வினியோகிக்கத் தயாராய் இருக்கும் பொருள். பெரும்பாலும், பீட்டா பதிப்பினை இவ்வாறு அழைப்பதில்லை. முடிக்கப்பட்ட இறுதிப் பதிப்பிற்கே இவ்வடைமொழி பயன் படுத்தப்படுகிறது.

shrink wrapped software : குறுக்கப் பொதிவு மென்பொருள் : சேமிப்பில் வாங்கிய மென்பொருள். பரவலாக ஆதரவு பெற்றுள்ள ஒரு தர அளவு மேடை.

SHTML : எஸ்ஹெச்டீஎம்எல் : வழங்கன் கூறாக்கும் ஹெச்டீஎம்எல் என்று பொருள்படும் Server-parted HTML என்பதன் சுருக்கம். வழங்கன் கணினியால் நிறைவேற்றப்படுகின்ற கட்டளைகள் உட்பொதிந்த மீவுரைக் குறியிடுமொழி (Hyper Text Markup Language) யில் அமைந்த உரை. எஸ்ஹெச்டீஎம்எல் ஆவணங்களை வழங்கன் முழுமையாகப் படித்துக் கூறாக்கி மாறுதல் செய்து உலாவிக்கு அனுப்பிவைக்கும்.

S-HTTP : எஸ்-ஹெச்டீடீபீ : பாதுகாப்பான மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Secure Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பல்வேறு மறையாக்கம் மற்றும் ஒப்புச்சான்று முறைகளை ஏற்பதாகும். அனைத்துப் பரிமாற்றங்களையும் முனைக்குமுனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹெச்டீடீபீ யின் நீட்டிப்பு நெறி முறையாகும்.

shutdown : நிறுத்து;முடித்து வை : தரவு இழப்பு எதுவும் நேராவகையில் ஒரு நிரலையோ, இயக்க முறைமையையோ முடிவுக்குக் கொண்டு வருதல்.

shut off : நிறுத்துக.

. si : . எஸ்ஐ : ஒர் இணைய தள முகவரி ஸ்லோவானிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. SI : எஸ்ஐ : systems International என்பதன் குறும்பெயர். உலகளவில் பன்னாட்டு மெட்ரிக் முறையின் செந்தரம்.