பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


bar printer:பட்டை அச்சகம்:வரியின் குறுக்கே அடுத்தடுத்து நிற்க வைக்கப்பட்ட பல பட்டைகளைப் பயன்படுத்தி அழுத்தி அச்சிடும் சாதனம்.

barrel distortion:உருளைச் சிதைவு:பக்கவாட்டில் வெளியேறக்கூடிய திரைக் காட்சிச் சிதைவு.

barrel printer:உருளை அச்சுப் பொறி:Drum Printer-க்கு வேறொரு பெயர்.

base:அடிவாய்;ஆதாரம் தளம்:1. எண் முறையின் ஒரு மூலம். 2. உமிழிலிருந்து வெளியேற்றப் பட்ட சிறுபான்மை கடத்திகளைப் பெறுகின்ற, இணைப்பு மின்மக் கடத்தியைப் பெறுமிடத்திற்கும் உமிழிக்கும் இடையே உள்ள பகுதி. 3. அச்சிட்ட மின்சுற்று அட்டையில் அச்சிட்ட அமைப்பைத் தாங்கும் பகுதி.

base 2:ஆதார எண் 2.

base 8:ஆதார எண் 8.

base 10:ஆதார எண் 10.

base 16:ஆதார எண்16

base address:தொடக்க முகவரி;அடிப்படை முகவரி;அடி முகவரி:ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்தின் முழுமுகவரியை உருவாக்க துணை முகவரியுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி.

base alignment:அடிப்பகுதி ஒழுங்கமைவுதல்:அடிக்கோடுகளில் பலவித அளவுகளில் எழுத்து வடிவங்களை அடுக்குதல்.

base band:அடிக் கற்றை;தாழ் அலைவரிசை:தாழ் அலை வரிசை வழித்தடத்தில் முழுப்பட்டை அகலமும் பயன்படுத்தப் பட்டு டிடிஎம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்பமுடியும்.

base band coaxial cable:தாழ் அலைக்கற்றை இணையச்சு வடம்.

baseband networking:அடிக்கற்றைப் பிணையம்:அனுப்பும் சாதனத்தில் இலக்கமுறை சமிக்கையை நேரடியாக வைக்கும் தகவல் தொடர்பு முறை.

baseband transmission:அடிக்கற்றை பரப்புகை:கோஆக்சியல் குழாய் மூலமாக குறைந்த தூரத்துக்கு குறைந்த அலை வரிசையில் சமிக்கைகளை அனுப்பும் முறை.

base case disk:அடிப் பெட்டி வட்டு:சிடி1- இல் பேஸ் கேஸ் அமைப்பில் இயங்கக்கூடிய வட்டு.

base case system:அடித் தட்டு அமைப்பு:சிடி1 முழு அமைப்பு அளவுகளில் குறைந்த அளவே பயன் படுத்துதல்.