பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sieve of Eratosthenes

1330

signalling in/out of band


Sieve of Eratosthenes : ஏரட்டோஸ்தீன்லின் சல்லடை : பகா எண்களைக் கண்டறிவதற்கான ஒரு தருக்கமுறை. ஒரு கணினியின் அல்லது ஒரு மொழியில் படிமுறைத் தருக்கத்தில் எழுதப்பட்ட ஒரு நிரலின் வேகத்தைக் கண்டறியும் அளவு கோலாக இது பயன்படுத்தப் படுகிறது.

sift : சலி;மாற்று : பெருமளவுத் தரவுகளிலிருந்து வேண்டிய குறிப்பிட்ட இனத்தை வரவழைத்தல். இது தேர்ந்தெடுத்தல் என்பதிலிருந்து வேறுபட்டது.

sifting : சலித்தல்;உள்முகப் பிரிப்பு : மற்றப் பதிவேடுகளை உட் செலுத்துவதற்கு அனுமதிப்பதற்காகப் பதிவேடுகளை உள்முகமாகப் பிரிப்பதற்கான முறை.

SiG : எஸ்ஐஜி : தனி நலக் குழுமம் எனப் பொருள்படும்"Special Interest Group"என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

. sig : . சிக், . எஸ்ஐஜி : மின்னஞ்சல் அல்லது இணையச் செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்படும் ஒப்பக் கோப்புகளின் வகைப்பெயர் (Extension). இந்தக் கோப்பின் உள்ளடக்கம், மின்னஞ்சல் மடல் அல்லது செய்திக்குழுக் கட்டுரையின் இறுதியில் அவற்றுக்குரிய கிளையன் மென்பொருள்களால் தாமாகவே சேர்க்கப்பட்டுவிடும்.

sigel density : தனிச் செறிவு.

SIGGRAPH : சிக்வரைகலை;சிக்கிராஃப் : கணினி வரைகலைக்கான சிறப்பு ஆர்வலர் குழு எனப்பொருள்படும் Special Interest Group on Computer Graphics என்ற தொடரின் சுருக்கம். கணிப்பணி எந்திரச் சங்கத்தின் (Association for Computing) ஓர் அங்கம்.

sign : குறி அடையாளம் : ஒர் எண் நேர் எண்ணா அல்லது மறிநிலை எண்ணா என்பதைக் குறிக்கும் கணிதக் குறியீடு.

signal : சைகை சமிக்கை : செய்தித் தொடர்புக் கோட்பாட்டில், செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஒரு பன்னாட்டு இடையீடு. இது ஒசை என்பதிலிருந்து வேறுபட்டது.

signal converter : சைகை மாற்றி : ஒரு சைகையின் மின்னியல் அல்லது ஒளியியல் எழுத்துகளை மாற்றுகிற சாதனம்.

signalling inlout of band : உள்/வெளிக்கற்றைச் சைகை : செய்தித்

தொடர்புகளில் உள்பட்டை என்பது, ஒரே அலை வீச்சினுள் தரவு சைகையைப்