பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

silicon compiler

1333

silicon wafer


மின்னணு அமைப்பிகளும் மின்சுற்று வழித் தோரணிகளும் செதுக்கப் பட்டுள்ள ஒரு சிலிக்கன் வில்லையின் ஒரு நுண்ணிய பகுதி.

silicon compiler : சிலிக்கன் தொகுப்பி;சிலிக்கன் கட்டுப்படுத்தும் சரியாக்கி : ஒரு சிப்புவின் மின்னணு வடிவமைப்பை உறுப்புகளின் உண்மையான கட்டமைப்பாக மாற்றுகிற மென்பொருள்.

silicon dioxide (SiO2 : சிலிக்கன் டையாக்சைடு (SiO2) : பாறை, படிகக்கல், மணல், மணிக்கல் போன்றவற்றில் காணப்படும் கடினமான, பளபளப்பான கனிமம். (MOS சிப்பு உருவாக்கத்தில், இது மேல்படுகையின் உலோக வழிகளுக்கும், கீழேயுள்ள சிலிக்கன் கூறு களுக்கு மிடையில் மின்காப்பினை ஏற்படுத்தப் பயன் படுத்தப்படுகிறது.

silicon disk : சிலிக்கன் வட்டு : நினைவகத்தில் நிரந்தரமாக மாற்றுருக் கொள்ளும் வட்டு இயக்கி. இது எடைக் குறைப்புக்காக"லேப்டாப்"களில் பயன் படுத்தப்படுகிறது. இதன் உள்ளடக்கங்களைப் பேணி வருவதற்கு ஒரு மின் கலத்திலிருந்து இதற்கு இடைவிடாது மின் விசையூட்டப்பட வேண்டும்.

silicon foundry : சிலிக்கன் வார்ப்படச்சாலை : வடிவமைப்பினை மட்டும் கொண்டு, உற்பத்தி செய்யும் வசதிகள் இல்லாத மற்ற நிறுமங்களுக்காகச் சிப்புகள் தயாரிக்கும் அமைவனம்.

silicon-on-sapphire : மாணிக்கத்தில் சிலிக்கான் : குறைகடத்திகளை உருவாக்குதலில் ஒரு வகை. செயற்கை மாணிக்கக் கல்லினால் கடத்தல் தடுப்பு செய்யப்பட்ட ஒற்றைச் சிலிக்கான் அடுக்கினால் ஆன குறைகடத்திச் சாதனங்கள்.

silicon valley : சிலிக்கான் வேலி;சிலிக்கான் பள்ளத்தாக்கு : கலிஃ போர்னியாவில் சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதன் உண்மையான பெயர் சாந்தா கிளாரா பள்ளத்தாக்கு என்பதாகும். பாலோ ஆல்ட்டோ விலிருந்து சான்ஜோஸ் வரையுள்ள பகுதி இது. மிகப்பெரும் மின்னணு மற்றும் கணினி ஆய்வு, உருவாக்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் நிறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

silicon wafer : சிலிக்கன் வில்லை;சிலிக்கன் ஒடு;சிலிக் கன் சீவல் : ஒருங்கிணைந்த சிப்புகள் உருவாக்கப் பயன்