பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SIMD

1334

simulation


படும் சிலிக்கன் சிப்பு. உருவாக்கியபின், இந்த வில்லை பல தனித்தனி சிப்புகளாக வெட்டப்பட்டு, கோட்டுத் தொகுதிகளில் இரட்டையாக ஏற்றப்படு கின்றன.

SIMD : எஸ்ஐஎம்டி : ஒற்றை நிரல் பல தரவு என்று பொருள்படும் Single-Instruction, Multi-Data என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலிக் கணினிக் கட்டுமானத்தில் ஒருவகை. ஒரு நிரல் செயலி நிரலை கொணர்ந்து மற்ற பல செயலிகளுக்கு நிரல்களை அனுப்பிவைக்கும்.

SIMM : சிம் : ஒற்றை உள்ளமை நினைவகக்கூறு என்று பொருள்படும் Single Inline Memory Module என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நினைவகச் சிப்புகளை மேற்பரப்பில் செருகக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய மின்சுற்றுப் பலகை.

Simple Mail Transfer Protocol : எளிய அஞ்சல் பரிமாற்ற நெறி முறை : ஒரு பிணையத்திலுள்ள ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு செய்திகளை அனுப்புவதற்கான டீசிபீ/ஐபீ நெறிமுறை. இணையத்தில் மின்னஞ்சல்களை திசைவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது. சுருக்கமாக எஸ்எம்டீபீ (SMTP) என்று அழைப்பர்.

simple querry wiz : எளிய வினவல் வழிகாட்டி.

simple type : சாதாவகை;எளிய இனம்.

simplex : ஒரு வழி;ஒற்றையான, எளிய : தரவுகளை ஒரே திரையில் மட்டுமே அனுப்பக்கூடிய ஒரு செய்தித்தொடர்பு இணைப்பு. இது முழு டூப்ளெக்ஸ், அரை டூப்ளெக்ஸ் என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

simplex transmission : எளிய அனுப்பு வழி : செய்தித் தொடர்பினை முன்னரே நிருணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே அனுமதிக்கிற, ஒரு வழியின் ஊடே தகவல்கள் நகர்ந்து செல்லுதல்.

SIMSCRIPT : சிம்ஸ்கிரிப்ட் : துண்டுதல் பயன்பாடுகளுக்காகக் குறிப்பாக வடிவமைக்கப் பட்ட உயர்நிலை செயல் முறைப்படுத்தும் மொழி.

simulation : தூண்டல்;போலச்செய்தல்;பாவனை;நடிப்பு;மற்றொன்றைப்போல் : மற்றொரு பொறியமைவின் செயல் முறையின் சில குறிப்பிட்ட