பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

simulator

1335

single-board


அம்சங்களை உருவாக்கிக் காட்டுதல். இயற்பியல் நிகழ்வுகளை, ஒரு கணினியில் நிறைவேற்றப்படும் செயற்பாடுகளின் மூலமாக இன்னொரு கணினி மூலம் செயற்படுத்துதல்.

simulator : தூண்டு கருவி;போலிச் செய்கருவி : ஒர் இயற்பியல் அல்லது அருவப் பொறியமைவின் செயல்முறையின் சில குறிப்பிட்ட அம்சங்களை உருவாக்கிக் காட்டுகிற சாதனம், கணினிச் செயல்முறை அல்லது பொறி யமைவு.

simultaneous : உடனிகழ்;ஒருங்கியல்;ஒரே நேர.

simulataneous input/output : உடனிகழ் உட்பாடு/வெளிப்பாடு;ஒருங்கியல் உட்பாடு/வெளிப்பாடு;ஒரே நேர உள்ளீடு/வெளியீடு : சில தகவல்களை உட்பாடாகச் செலுத்தவும், வேறு சில தகவல்களை வெளிப்பாடாக அமையவும் அனுமதிக்கிற சில கணினிப்பொறி யமைவுகளிலுள்ள செய்முறை.

simultaneous processing : ஒருங்கியல் செய்முறைப்படுத்துதல்;ஒரே நேரச் செயலாக்கம்;உடனிகழ் செயலாக்கம் : ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்தல். இது உடனிகழ்வுச் செய்முறைப் படுத்துதலிலிருந்து வேறுபட்டது.

sine wave : சைன் அலை : ஒற்றை அலைவரிசையில் அதிரும் பொருள்களினால் உருவாக்கப்படும் ஒரே சீரான, குறிப்பிட்ட நேரச் சீர்மையுடன் கூடிய அலை.

சைன் அலை

சைன் அலை

single : தனி;ஒற்றை.

single address : தனிமுகவரி;ஒற்றை முகவரி.

single bit error : ஒற்றை பிட்பிழை;ஒற்றைத் துண்மி வழு.

single-board : ஒற்றைப் பலகை : கணினியில் இருக்கும் ஒருவகை மின்சுற்றுப் பலகை. ஒரே ஒரு பலகை மட்டுமே இருக்கும். பொதுவாக, கூடுதலாக வேறு பலகைகளைச் செருவதற்கு இடம் இருக்காது.