பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

size box

1338

skutch box


size box : உருவளவுப் பெட்டி : மெக்கின்டோஷ் கணினித் திரையில் தோன்றும் விண்டோவின் சட்டத்தில் மேல் வலதுமூலையில் காணப்படும் இயக்கு விசை. பயனாளர் இந்தப் பெட்டிமீது சொடுக்கும்போது, சாளரம் உச்ச அளவுக்கும் பயனாளர் வரையறுத்த அளவுக்கும் இடையே மாறும்.

. si : . எஸ்ஜே : ஒர் இணைய தள முகவரி ஸ்வால் பார்டு-ஜேன் மாயென் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. sk : எஸ்கே : ஒர் இணைய தள முகவரி ஸ்லோவாக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sketching : உருவரை தீட்டுதல்;செதுக்குதல்;வரைவு : கணினி வரைகலை உத்தி. இதில் சறுக்கியின் பாதை நெடுக கோடுகளின் ஒரு பட்டை வரையப்படுகிறது அல்லது தீட்டப்படுகிறது.

sketch pad : உருவரை திண்டு;செதுக்கு அட்டை : வரைவுஅட்டை : காட்சித் திரையில் காட்டப்படும் செயல்முறைச் சேமிப்புப்பகுதி. இது, வரை கலையை அல்லது வாசகத தகவல்களை நிரந்தரமாகச் சேமித்து வைப்பதற்கு முன்பு, இயக்குபவர் எளிதாகச் சேர்க்க வும்நீக்கவும் அனுமதிக்கிறது.

skew : சாய்வு;திரிபு;கோணல் : எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பதற் கிடையேயான வேறுபாடு. (எ-டு) ஒர் ஆவணத்தை அச் செடுக்கும்போது உள்ளபடி அச்சாகாமல், சீரமைவு சரியின்றி அச்சாதல். மின்சுற்றுகள் பரப்பப்படும் சமிக்கைகளுக்கு ஒன்று போலப் பதிலிறுக்காத சூழ்நிலையில், உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே வேறுபாடு இருத்தல்.

skip : துள்ளல்;தாண்டு;தவிர் : நிரல்கள் ஒரு வரிசை முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல்களைப் புறக்கணித்து விடுதல்.

skip forward : முன்னோக்கி நகர்.

skutch box : ஸ்கட்ச் பெட்டி : ஸ்கட்ச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒரு சாதனத்தின் பேச்சுவழக்குச் சொல். ஒரு தொலைபேசி இணைப்புபோன்ற பாவிப்புகளை (simulations) உருவாக்க இந்த சாதனம் உதவும். தொலைத் தொடர்பு அமைப்புகளையும் சாதனங்களையும் சோதனை செய்ய இச்சாதனம் உதவும்.