பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. sl

1339

slide show


. sl : . எஸ்எல் : ஒர் இணைய தள முகவரி சியாரா லியோன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

slab : சொல்;சொற்பகுதி : ஒரு சொல்லின் பகுதி.

slace : ஸ்லேஸ் : மற்றொரு சாதனத்தினால் கட்டுப்படுத்தப் படும் சாதனம்.

slack time : ஓய்வு நேரம்;தளர் நேரம்.

slave : அடிமை : வேறொரு சாதனத்தினால் கட்டுப்படுத்தப் படும் சாதனம்.

slave system : அடிமை முறைமை.

slave tube : அடிமைக் குழாய் : இரு குழாய்களும் ஒரே மாதிரியாகச்-செயல்படுகிற வகையில் ஒரு மின்வாய் மற்றொரு மின்வாயுடன் இணைக்கப்பட்டுள்ள மின்வாய்.

sleep : உறக்கம் : செயல் முறைப்படுத்துவதில் முடிவற்ற வளையம் அல்லது செயல் முறைப்படுத்திய காலதாமதம் காரணமாக ஏற்படும் செயலற்ற நிலை. செயல் முறைப்படுத்தும் மொழியில் உறக்க கட்டளை யானது, ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்குக் காலத்தாழ் வினை உண்டாக்குகிறது.

sleeve : குழல்;உறை;காப்புறை : ஒரு நெகிழ்வட்டினைச் சேமித்து வைப்பதற்கான பாதுகாப்பு உறை.

slew : விசை ஊசல்;நகர்த்து;ஒட்டு : ஒர் அச்சுப்பொறி ஊடே காகிதத்தை நகர்த்தல்.

sewing : விசை ஊசலாட்டம்;நகர்த்துதல்;ஒட்டம் : எண்மான முறையில் கட்டுப்படுத்தப் படும் எந்திர சாதனங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தும் வேகம்.

slice : துண்டம்;நறுக்கு : சிப்பு கட்டமைவின் ஒரு தனிவகை. இது, சொல் துண்மிக்கு வடிவளவை அதிகரிப்பதற்குச் சாதனங்களை இடையிணைப்பு செய்வதற்கு அனுமதிக்கிறது.

side : காட்சி வில்லை;பட வில்லை : வரிசையாகக் காட்டப்படும் திரைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு படக்காட்சி.

slide rule : நகரும் சட்டகம்;நழுவு நுண்ணளவு கோல்.

slide show : வில்லைக் காட்சி;காட்சி வில்லைக் காட்சி : ஒளிப்

பேழைக் காட்சித் திரையில் ஒரு காலவரிசைப்படி வரைகலை உருக்காட்சிகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென்பொருள்.