பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

slide show package

1340

slip stream


slide show package : காட்சி வில்லைக் காட்சித் தொகுதி;வில்லைக் காட்சித் தொகுப்பு : ஒளிப்பேழைக் காட்சித் திரையில் இனங்களின் வரிசைமுறையில் வரைகலைகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென் பொருள் தொகுதி. மைக்ரோ சாஃப்டின் பவர்பாயின்ட் பணித் தொகுப்பில் இது போன்ற திரைக்காட்சிப் படைப்பை உருவாக்க முடியும்.

sliding window : சறுக்குப் பலகணி;சறுக்குச் சாளரம் : ஒப்புகையளிப் பதற்கு முன்பு பன்முகத் தொகுதிகளை அனுப்புகிற செய்தித் தொடர்பு மரபு முறை. அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப்பட்ட தொகுதிகளின் போக்கினை இருமுனைகளும் கண்காணிக்கின்றன. அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப்பட் டவை பல கணியின் இடப்புறமும், அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப் படாதவை பலகணியின் வலப்புறமும் காணப்படும்.

SLIP : ஸ்லிப் : 1. நேரியல் இணைப்பு இணைய நெறிமுறை என்று பொருள்படும் Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபீ தரவுப் பொதிகளை தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்புவதற்கு அனுமதிக்கும் ஒரு தரவுத் தொடுப்பு நெறிமுறை (Data Link Protocol) ஒரு தனிக்கணினி அல்லது ஒரு குறும்பரப்புப் பிணையம், இணையத்துடனோ இன்னபிற பிணையங்களுடனோ இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள இது வசதி செய்கிறது.

SLIP emulator : ஸ்லிப் போன்மி;ஸ்லிப் ஒப்பாக்கி;ஸ்லிப் போலாக்கி : யூனிக்ஸ் செயல்தள இணைப்புகளில் நேரடியான ஸ்லிப் இணைப்பு வழங்காமல், ஸ்லிப் இணைப்பு போலவே செயல்படும் மென்பொருள். பெரும்பாலான இணையச் சேவை நிறுவனங்கள் யூனிக்ஸ் அடிப்படையிலேயே செயல் படுகின்றன. பயனாளர்களுக்கு செயல்தளக் கணக்கு மூலம் இணைய அணுகலை வழங்குகின்றன. ஸ்லிப் இணைப்பு போன்றே, ஸ்லிப் போன்மிகளும் பயனாளர், இணையத்தில் இணையும்போது, நேரடியாக, சேவை நிறுவனத்தின் யூனிக்ஸ் சூழலை அணுகுவதைத் தவிர்த்து, வரைகலை வலை உலாவிகளைப் போன்றே இணையப் பயன்பாடுகளை நுகர்வதற்கு வாய்ப்பளிக்கின்றன.

slip stream : சறுக்கு ஓட்டம் : மென்பொருளில் ஒரு நுண்ணிய