பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

smilley

1345

smooth scrolting


வரத்துச் சேவை ஆகும். குறும்பரப்புப் பிணையங்களையும், விரிபரப்புப் பிணையங்களையும் பொதுத் தொலை பேசிப்பிணையம் மூலமாக இணைக்கிறது.

smilley : குறுநகையி.

S/MIME : எஸ்/மைம் : பாதுகாப்பான பல்பயன் இணைய அஞ்சல் நீட்டிப்புகள் என்று பொருள்படும் Secure/Multipurpose Internet Mail Extensions என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். பொதுத் திறவி (Public Key) மறையாக்கத்தை (encryption) பயன்படுத்திக்கொள்கிற ஒர் இணைய மின்னஞ்சல் பாதுகாப்புத் தர வரையறை.

SMIS : எஸ்எம்ஐஎஸ்;ஸ்மிஸ் : 'நிருவாகத் தகவல் பொறியமைவுக் கழகம்'என்று பொருள்padum Society for Management Information System என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது நிருவாகச் செயற்பாடுகளையும், தகவல் பரிமாற்றங்களையும் மேம்படுத்துவதற்கான ஒரு தொழில்முறை அமைவனம்.

smoke test : புகைச் சோதனை : ஒரு வன்பொருள் கருவியைச் செய்து முடித்தவுடன் அல்லது பழுதுபார்த்து முடித்தவுடன் அதனை இயக்கிப் பரி சோதித்தல். அக்கருவியிலிருந்து புகை வந்தாலோ, வெடித்து விட்டாலோ அல்லது எதிர்பாராக் கடும் விளைவு ஏற்பட்டாலோ அது நன்றாக இயங்குவதுபோல் இருந்தாலும், சோதனையில் தோல்வியடைந்ததாகவே கருதப்படும்.

smooth : சமனம் செய்தல்;எளிதான;சீரான : தரவுகளில் விரைவான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிற அல்லது ஒழிக்கிற நடைமுறை.

smoothing circuit : சமனச் சுற்று வழி : நேர்மின்னோட்டத்திலுள்ள மின்னணு வடிகட்டும் சுற்றுவழி. இது மாற்று மின்னோட்ட விசையிலிருந்து அதிர்வலைகளை அகற்றுகிறது.

smoothed data : சமனத் தரவு : புள்ளிவிவரத் தரவுகளில் வரை படத் திலுள்ள வளைவுகளைச் சமனமாக்கும் வகையில் சராசரி யாக்கம் செய்யப்பட்ட புள்ளி விவரத் தரவு.

smooth scrolling : சமனச் சுருளாக்கம்;சுழற்றுதல்;சீரான உருளல் : ஒரு வரியிலிருந்து இன்னொருவரிக்குச் சுரிப்பிழப்பின்றி வாசகங்களைச் சுருளாக் கம் செய்வதற்கான திறம்பாடு.