பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SMP server

1346

. snd


SMP server : எஸ்எம்பீ வழங்கன் : செவ்வொழுங்கு பல்செயலாக்க வழங்கன் (Symmetric Multiprocessing Server) என்பதன் சுருக்கம். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் வழங்கனின் செயல்திறனை மிகுவிக்க ஒரு கணினி எஸ்எம்பி கட்டுமானத்தில் வடிவமைக்கப்படுகிறது.

. sn : . எஸ்என் : ஒர் இணைய தள முகவரி செனகல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

SNA : எஸ் என் ஏ;ஸ்நா;கணினி இணையக் கட்டமைப்பு : பொறியமைவு இணையக் கட்டமைவு என்று பொருள்படும் Systems Network Architectufe என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

snail mail : நத்தை அஞ்சல் : மரபுமுறையிலான அஞ்சல் போக்கு வரத்தை அதன் வேகங்கருதி இணையப் பயனாளர்கள் கிண்டலாகக் குறிப்பிடுவது. மின்னஞ்சலோடு ஒப்பிடுகையில் மரபுமுறை அஞ்சல் நத்தை வேகமே.

snapshot : நொடிப்பு சேமிப்பு : வன்பொருள் பதிவேடுகள், தகுநிலைக் குறியீடுகள் அனைத்தும் உட்பட நினைவகத்தின் உள்ளடக்கங்களைச் சேமித்து வைத்தல். செயற்பாடு நின்று விடும்போது பொறியமைவை மீண்டும் இயக்குவதற்கும், எங்கு எப்போது தவறு நேர்ந்தது என்பதைக் கண்டறியவும் இவ்வாறு காலமுறையில் செய்யப்படுகிறது.

snapshot dump : நொடிப்புகுவியல்;தடாலடித் திணிப்பு : குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடங்களின் மற்றும்/அல்லது பதிவேடுகளின் உள்ளடக்கங்களின் செயல்முறை ஒடும் போது குறிப்பிட்ட புள்ளிகளில் அல்லது நேரங்களில் நிறை வேற்றுகிற பதிவேடுகளின் இயக்காற்றல் குவியல்.

snapshot programme : நொடிப்பு நிரல்;நொடிப்பார்வை நிரல் : 'குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நினைவகத்தின் ஒரு பகுதியை நொடிப் பார்வை யிட்டு கண்காணிக்கும் நிரல்.

. snd : . எஸ்என்டி : சன், நெக்ஸ்ட், சிலிக்கான் கிராஃ பிக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் மாறு கொள்ளத்தக்க (Interchangable) 9a) ஒலிக்கோப்பு வடிவாக்கத்தைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர். அக்கோப்புகள் செப்பமற்ற கேட்பொலித் தகவலைக்