பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Society For Information

1348

soft fails


கழகம்;கணினி போலி நிகழ்வுச் சங்கம் : துண்டுதல் மற்றும் அதன் தொடர்பான தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக முக்கியமாகப் பாடுபடும் ஒரே தொழில்நுட்பக் கழகம். முக்கியமாக, நிருவாகம், சமூக, அறிவியல், உயிரியல், சுற்றுச் சூழல் சிக்கல்களைக் கையாள்கிறது. இதற்கு உலகெங்கும் உறுப்பினர்கள் உள்ளனர். Society For Information Management : தகவல் மேலாண்மைக் கழகம் : சிகாகோவில் செயல்படும் ஒரு தொழில் முறை அமைப்பு. தகவல் அமைப் புகளின் நிர்வாகிகளுக்கானது. முன்பு இதன்பெயர் : மேலாண்மைத் தகவல் அமைப்புக் கழகம்.

society of certified data processors; (SCDP) : சான்றளிக்கப்பட்ட தரவு செய்முறைப்படுத்துநர் கழகம்;சான்றிதழ் பெற்ற தரவு செயலாக்கங்களின் சங்கம் : சான்றளிக்கப்பட்ட கணினித் தொழில்முறையாளர்களின் நலன் களுக்காகவும் விருப்பங்களுக்காகவும் பாடுபடும் அமைவனம். இது 1971இல் அமைக்கப்பட்டது. அந்த அமைவனத்தின் நிலைப்பாடுகளையும், நடவடிக்கை களையும், நெறியுறுத்தங்களையும் உறுப்பினர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். ICCP சான்று பெற்றோரின் நலன்களுக்குப் பாடுபடும் ஒரே நிறுவனம்.

socket : குதைகுழி துளை கோள்குழி : செருகியை பொருத்துவதற்குரிய கொள்குழி.

soft : மென்.

soft clip area : மென் பிடிப்புப் பகுதி, மென்பிடி பகுதி : மென்வரை பரப்பு : தரவுகள் ஒரு வரைவி சாதனத்தில் எந்தப் பகுதியில் அளிக்கப்பட வேண்டுமோ அந்தப் பகுதிகள், வரம்புகள்.

soft copy : மென்படி;மென் பிரதி;மென் நகல் : ஒரு ஒளிப் பேழை உருவமைவில் ஒர் ஒளி உருக்காட்சியாக அல்லது வன்படியாக அல்லாத வேறேதேனும் வடிவில் வழங்கப்படும் தரவு.

soft error : மென்பிழை : மீண்டும் அனுப்பிடத்தக்க திரிபடைந்த செய்தி போன்ற மீட்கத்தக்க சிறுபிழை. இது"வன்பிழை"என்பதிலிருந்து வேறுபட்டது.

soft fails : மென் தளர்வுகள்;மென் தோல்வி;மென் பிறழ்வுகள் : நுண் மின்னணுச் சுற்று வழிகளில் மின்காந்த நுண் அலைத் துகள்களினால் உண்டா