பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


base register வேறொன்றும் குறிப்பிடவில்லையென்றால் அச்சடிக்கப் பயன் படும் எழுத்து வடிவம்.

base register : அடிப்படைப் பதிவகம் : தொடர்பு முகவரியை முழு முகவரியாக மாற்றும் பட்டியல் பதிவகம்.

Basic : பேசிக் - ஒரு கணினி மொழி (தொடக்கநிலை பல்திறன் குறியீட்டு ஆணைமொழி) : Beginners All Purpose Symbolic Instruction Code என்னும் நீண்ட பெயரின் ஒவ்வொரு சொல்லின் முதலெழுத்துகளின் சுருக்கப் பெயர். கற்பதற்கும் பயன்படுத்து வதற்கும் ஒரு கணினி நிரலாக்க மொழி. மிகக்குறைவான ஆணைகளும் எளிய சொற்றொடர் வடிவங்களும் உடையது. டார்ட் மவுத் கல்லூரியில் ஜான் கெம்னி மற்றும் தாமஸ் குர்ட்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. சொந்தக் கணினியிலும் வணிக, தொழில் துறை, நுண்கணினிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

basic contents : அடிப்படை உள்ளடக்கங்கள்.

basic FORTRAN : அடிப்படை ஃபோர்ட்ரான் : ஃபோர்ட்ரான் நிரலாக்க மொழியில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு பிரிவுகளில் ஒன்று.

Basic Input Output System (BIOS) : அடிப்படை உள்ளீட்டு/வெளியீட்டு முறைமை : வட்டு இயக்கி தொடர்பானது தவிர மற்ற உள்ளீட்டு / வெளியீட்டு பணிகளைக் கட்டுப்படுத்தும் செயலாக்க அமைப்பின் பகுதி.

BASIC in ROM : ரோமில் பேசிக் : பயன்படுத்துவோருக்கு எப்போதும் கிடைக்கும் வகையில் படிக்க மட்டும் நினைவகத்தில் சேமித்து வைத்துள்ள அடிப்படை நிரல் மாற்றி.

basic language : அடிப்படை கணினி மொழி.

Basic linkage : அடிப்படை தொகுப்புகை : ஒரு நிரலின் சிறு செயல்கூறு அல்லது ஒரு நிரல் அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே மாதிரியான விதிமுறைகளையே பின்பற்றும்.

BASIC PLUS : பேசிக் பிளஸ் : பேசிக் மொழியை நீட்டித்த மொழி. தரவுவைக் கையாளுதல் போன்ற சக்திமிக்க செயல்திறன்கள் சேர்க்கப்பட்ட பேசிக் மொழி.

. bat : . பேட் : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொகுதி

நிரல் கோப்புகளை அடையாளங்