பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

software-based modern

1351

software documents


உள்ளதோ அந்த அளவுக்கு கணினிப் பொறியமைவு திறம் பாடுடையதாக இருக்கும்.

software-based modem : மென் பொருள் அடிப்படையிலான இணக்கி (மோடம்) : மறு நிரலாக்கத்தகு இலக்கமுறைச் சமிக்கை பொதுப்பயன் செயலிச் சிப்புவைக் கொண்ட ஒர் இணக்கி. இதில், இணக்கியின் செயல் பாடுகள் சிலிக்கானில் பொறிக்கப்பட்ட தனி சிப்புவுக்குப் பதிலாக ரேம் (RAM) அடிப்படையிலான நிரல் நினைவகத்தைக் கொண்டுள்ளன. மென்பொருள் அடிப்படையிலான இணக்கிகளின் பண்புக் கூறுகளையும் செயல்பாடு களையும் மாற்றியமைக்க எளிதாக தகவமைவுகளைத் திருத்தியமைக்க முடியும்.

software broker : மென்பொருள் தரகர் : மென்பொருள் தொகுதிகளை விற்பனை செய்வதில் தனிக்கவனம் செலுத்தும் ஆள்.

software carousel : மென்பொருள் களரி : "சாஃப்ட்லாஜிக் சொலுவுன்ஸ்" என்ற நிறுவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள பணி விசைச் செயல்முறை. ஒரே சமயத்தில் 12 பயன்பாடுகளைக் கொண்டு, அவற்றுக் கிடையே முன்பின் செல்வதற்கு இது அனுமதிக்கிறது.

software campany : மென் பொருள் நிறுவனம்;மென் பொருள் கூடம்.

software compatability : மென்பொருள் ஒத்தியல்புத்திறன்;மென்பொருள் ஏற்புடைமை : ஒரு பொறியமைவுக்காக எழுதப்பட்ட செயல்முறையினை மாற்றம் எதுவுமின்றி இன்னொரு செயல்முறையில் பயன்படுத்தும் திறன்.

software-dependent : மென் பொருள் சார்பானது : அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிரலோடு அல்லது நிரல் தொகுப்போடு இறுகிப் பிணைக்கப்பட்ட ஒரு கணினி அல்லது ஒரு மின்னணுச் சாதனம்.

software development : மென் பொருள் மேம்பாடு;மென் பொருள் உருவாக்கம் : ஒரு பயன்பாட்டாளரின் தேவைப் பாடுகளை நிறைவு செய்கிற செயல்முறைகளின் தொகுதிகளை உருவாக்குதல்.

software documents : மென் பொருள் ஆவணங்கள் : கணினிச் சாதனத்

துடனும் மென்பொருள் பொறியமைவுகளுடனும் தொடர்புடைய எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட வாசகங்கள்.