பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

software interrupt

1353

software portability


போல, ஏற்கெனவே உள்ள ஒரு மென்பொருள் கூறினை ஒரு நிரலுக் குள் பொருந்துமாறு வடிவமைத்தல்.

software interrupt : மென் பொருள் இடையீடு : ஒரு மென் பொருள் INT அறிவுறுத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் இடையீடு.

software librarian : மென் பொருள் நூலகர் : ஒரு நிறுமத்தில், வட்டுத் தொகுதிகள், நெகிழ்வட்டுகள், காந்த நாடாக்கள் போன்ற பெருமளவு மென் பொருள் தொகுதிக்கு பொறுப்பாகவுள்ள ஆள்.

software license : மென்பொருள் உரிமம் : ஒரு மென்பொருளை கொள்வினை செய்பவர் கையெழுத்திட்டுக் கொடுக்கும் ஒப்பந்தம். இதன்படி, வாங்கும் மென்பொருள்களை மறு விற்பனை செய்வதில்லை என்று வாங்குபவர் உறுதி மொழியளிக்கிறார்.

software maintenance : மென் பொருள் பராமரிப்பு;மென் பொருள் பேணல் : தற்போதுள்ள செயல்முறைகளில் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கும், நீக்குவதற்குமான செய்முறை. இது பராமரிப்புச் செயல்முறையாளர்களால் செய்யப்படுகிறது.

software monitor : மென் பொருள் கண்காணிப்பி;மென் பொருள் திரையகம் : செயல் புரிவதை அளவிடும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் செயல்முறை.

software package : மென் பொருள் தொகுதி;மென்பொருள்தொகுப்பு; மென் பொருள் பொதி : தொடர்புடைய கணினிச் செயல்முறைகளின் தொகுதி. இதில் பெரும்பாலும் ஒரு சேமிப்புச் சாதனத்தில் (நெகிழ் வட்டு) சேமித்து வைக்கப்பட்டுள்ள செயல்முறைகள்.

software patent : மென்பொருள் காப்புரிமை.

software piracy : மென்பொருள் திருட்டு;கணினி செயல்முறைத் திருட்டு; மென்பொருள் களவு : வணிக முறையிலான அல்லது காப்புரிமையுள்ள மென் பொருள்களை, உருவாக்கியவரின் அனுமதியின்றிப் படி யெடுத்தல்.

software portability : மென் பொருள் தகவமைத் திறன்;மென்பொருள் பெயர்வுத் திறன்;மென்பொருள் ஏற்புடைமை : ஒரு கணினிச் சூழலி

லிருந்து இன்னொரு சூழலுக்கு ஒரு செயல்முறையை எளிதாக நகர்த்தும் திறன். கணினித்