பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

software tool

1355

solicitation


கணினி அமைப்பின் மென் பொருள் பயன்பாடுகள், நிரல் தொடர்கள் மற்றும் அமைப்பு நிரல் தொடர்களாகப் பிரிக்கலாம்.

software tool : மென்பொருள் கருவி : மற்ற மென்பொருள் செயல் முறைகளை உருவாக்குவதற்கு உதவும் செயல்முறை. இது, வடிவமைப்பு, குறியீடிடுதல், தொகுத்தல் போன்றவற்றைச் செய்ய பயன்படுத்துவோருக்கு உதவுகிறது.

software transportability : மென் பொருள் இடம் பெயர் திறன்;மென் பொருள் மாற்றத் திறன்;மென்பொருள்அனுப்பப்படும் தன்மை : ஒரு கணினிக்காக எழுதப்பட்ட ஒரு செயல் முறையை மற்றொரு கணினி மாற்றி, மாற்றம் எதுவுமின்றி செயல்படுத்தும் திறன்.

softwhite : மென்வெண்மை.

solar cell : சூரியச் சிற்றம்;சூரிய மின்கலம் : வெப்பக்கதிர் வீச்சினை ஈர்த்து மாற்றம் செய்கிற மின்கடத்தா மின்னியல் சந்திப்புச் சாதனம். இதில் சூரிய ஒளியின் ஆற்றல் நேரடியாகவும் திறம்படவும் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

solaris 2. 0 : சோலாரிஸ் 2. 0 : சன் சாஃப்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்பார்க் கணினிகள், சொந்தக் கணினி ஆகியவற்றுக்கான பன்முகப்பணிச் செயற்பாட்டுப் பொறியமைவு. இது சோலாரிஸ் 1. 0 (ஸ்பார்க் மட்டும்) உடன் இணைக்கக்கூடியது. இது பகிர்மான கணிப்புக்கு வடிவமைக்கப்பட்டது. TCP/IP மரபு முறை இதில் அடங்கும்.

solder mask : பற்றாசு மூடி : ஓர்ப்அச்சடித்த சுற்றுவழிப் பலகையில், பற்றாக செய்யவேண்டிய பகுதிகளை மட்டும் மூடாமலிருக்கும் மின்காப்புத் தோரணி.

solenold : சோலனோல்ட் : ஒரு மின்சுற்று வழியை மூடுகிற காந்த விசை. இது பெரும்பாலும் இடை மாற்றீடாகப் பயன்படுகிறது.

சோலனோல்ட

solicitation : கோரிக்கை;அழைத்தல் : மென்பொருள்கள் வன்பொருள்கள் அல்லது சேவைகளுக்கான ஏலங்களைப் பணிந்தனுப்பும்படி விற்பனை யாளர்களிடம் கோருதல்.