பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

solid model

1356

SOM


solid model : திண்ம மாதிரியம்.

solid modeling : திடநிலை உருமாதிரி : திடப்பொருள்களின் உருக் காட்சியை உருவாக்குவதற்கான கணித உத்தி. இது வடிவத்திலிருந்து குறைந்த உருவமுடையது. கம்பிச் சட்டகம், மேற்பரப்பு உருமாதிரி போலன்றி திடநிலை உருமாதிரிப் பொறியமைவுகள் எல்லா மேற்பரப்புகளும் சந்திக்கும்படி செய்து, பொருள் வடிவ கணித அளவில் துல்லியமாக அமையுமாறு செய்கிறது. திடநிலை உருமாதிரியின் உள்ளடக்கங்களைப் புலப்படுத்துவதற்காக அதனைக் கூறிடலாம்.

solid state : திடநிலை;திடநிலை சாதனம் : ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள்.

solid state cartridge : திடநிலைப் பொதியுறை;திடநிலைப் பெட்டி; திடநிலைப் பேழை;திண்ம நிலைப் பேழை : பல நுண்கணினிப் பொறி யமைவுகளுடன் பயன்படுத்தப்படும் தகவமைவிலுள்ள செயல் முறைப்படுத்திய செருகி.

solid state device : திடநிலைச் சாதனம்;திண்ம நிலைக் கருவி : திடநிலை மின்னணுச் சுற்று வழித் தனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாதனம்.

solid-state disk drive : திண்ம நிலை வட்டு இயக்ககம் : காந்த முறைச் சேமிப்பகத்துக்குப் பதிலாக ரேம் நினைவகச் சிப்புகளில் ஏராளமான தகவலைச் சேமித்து வைத்துக்கொள்ளும் சேமிப்புச் சாதனம்.

solid state memory : திடநிலை நினைவகம் : எந்திர பாகங்கள் எதுவு மில்லாத ஒரு மின்மப் பெருக்கம் செய்யப்பட்ட மின் கடத்தி அல்லது மெல்லிய சுருள்.

solid state relay : திடநிலை அஞ்சல் : எந்திரபாகங்கள் இல்லாத அஞ்சல். இதிலுள்ள விசைச் செயல்முறைகள் அனைத்தும் மின்கடத்திகள் அல்லது மென்சுருள் அமைப்பிகள்.

solver : தீர்வு வழங்கி;விடை வழங்கி : உருவாக்கம் செய்வதற்கு விரிதாளை அனுமதிக்கிற கணிதச் செயல்முறைகள்.

SOM : சாம்;எஸ்ஓஎம் : முறைமை பொருள் மாதிரியம் எனப்பொருள்

படும் System Object Model என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். கோர்பா (CORBA) தரவரையறைகளை