பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sort order

1358

Sound Sentry


பட்ட வரிசையில் பதிவேடுகளைப் பிரிக்கவோ சேர்க்கவோ பயன் படுத்தப்படும் பொதுவான செயல்முறை.

sort order : வரிசை ஒழுங்கு.

sound bandwidth : ஒலிக்கற்றை அகற்சி : ஒலி அலைவெண்களின் வீச்செல்லை. மனிதரின் காது ஏறத்தாழ 20 முதல் 20, 000 Hz ஒலி வீச்சைக் கேட்க முடியும். ஆனால் மனிதரின் குரலுக்கு வீச்செல்லை 3, 000Hz மட்டுமே.

sound buffer : ஒலி இடையகம் : கணினியிலிருந்து ஒலிபெருக்கிகளுக்கு அனுப்பப்பட இருக்கும் ஒலித்தகவலின் துண்மிப் (பிட்) படிமங்களைச் சேமிக்கப் பயன்படும் நினைவகப் பகுதி.

sound card : ஒலி அட்டை : பீசி ஒத்தியல்புக் கணினிகளில் இருக்கும் ஒருவகை விரிவாக்க அட்டை. ஒலியைப் பதிவு செய்ய, ஒலியை மீண்டும் இசைக்கச் செய்ய முடியும். ஒரு WAV அல்லது MIDI கோப்புகளை அல்லது ஒரு இசைக் குறுவட்டிலிருந்து பாடல்களைக்கேட்க முடியும். தற்காலத்தில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கணினிகளில் ஒலி அட்டை தனியாக இருப்பதில்லை. தாய்ப்பலகையிலேயேஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

sound clip : ஒலித்துணுக்கு;ஒலி நறுக்கு : ஒரு குறுகிய கேட்பொலித் துணுக்கைக் கொண்டுள்ள ஒரு கோப்பு. பெரும்பாலும் ஒரு நீண்ட இசைப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய ஒலித் துணுக்கு.

sound editor : ஒலித்தொகுப்பி;ஒலி திருத்தி : பயனாளர் ஒலிக் கோப்புகளை உருவாக்கிக் கையாள வகை செய்யும் ஒரு நிரல்.

sound format : ஒலி வடிவம்.

sound generator : ஒலி இயற்றி;ஒலி உருவாக்கி : செயற்கை ஒலியை உருவாக்கும் கருவி. ஒரு சிப்புவாக அல்லது சிப்பு நிலை மின்சுற்றாக இருக்கலாம். மின்னணுச் சமிக்கைகளை உருவாக்கி, ஒலிபெருக்கிகள் வழியாக செயற்கை ஒலியை ஒலிக்கச் செய்யலாம்.

sound hood : ஒலிக் கவிகை;ஓசை மூடி;ஒலிக்கூடு : பயன் பாட்டின் போது ஒசையைக் குறைப்பதற்காக அச்சடிப்பி மீது பொருத்தப்படும் சாதனம். இதனை"ஒசை அடைப்பு"என்றும் கூறுவர்.

sound recorder : ஒலிப்பதிவி.

Sound Sentry : ஒலிக் காவலாள்;ஒலிக் கண்காணி : சரியாகக்