பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sound waves

1359

source deck


காதுகேளாதோர், மிகுந்த இரைச்சலுக்கிடையே பணி யாற்றுவோர்- இவர்களுக்காக விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு வசதி. கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது எப்போ தெல்லாம் பீப் ஒலியெழுப்பி எச்சரிக்கை செய்யப்படுகிறதேர் அப்போதெல்லாம் திரையில் பயனாளரின் கவனத்தைக் கவரும் வண்ணம் எச்சரிக்கைச் சின்னம் தோன்றும். திரை பளிச்சிடலாம் அல்லது பணியாற்றும் சாளரத்தின் தலைப்புப் பட்டை மினுக்கலாம்.

sound waves : ஒலி அலை.

source : ஆதாரம்;மூலம்;மூலா தாரம் : ஒரு களவிளைவு மின்மப் பெருக்கியின் மூன்று முனையங்களில் அல்லது மின்வாய்களில் ஒன்று. வடிகால் வாயிலுக்குப் பாய்கின்ற மின் விசை ஊர்திகளின் தோற்றுவாய்.

source code : ஆதார நிரல் தொடர்கள்;மூலக் குறிமானம்;ஆதாரக் குறிமுறை;மூல வரைவு : ஒரு கணினியால் செய்முறைப்படுத்துவதற்கு முன்புள்ள மூலவடிவிலுள்ள நிரல் தொகுதி. கணினியானது ஆதாரக் குறியீட்டினைக் கணினி புரிந்து கொள்ளக்கூடிய ஒரு குறியீடாகத் தானாகவே மாற்றுகிறது.

source computer : ஆதாரக் கணினி;மூலக் கணினி : ஆதாரச் செயல் முறையை ஒர் இலக்குச் செயல்முறையாக மொழிபெயர்க்கப் பயன்படும் கணினி.

source data : மூலத் தரவு : ஒரு கணினிப் பயன்பாடு, அடிப்படையாகக் கொண்டுள்ள மூலத் தரவுகள்.

source data acquisition : மூலத்தரவுக் கொள்முதல் : பட்டைக் குறி மானப் படிப்பி அல்லது பிற வருடல் சாதனங்களைப்போல, தரவுகளை உணரும் செயலாக்கம். அல்லது ஒலித் தரவுகளைப் பெறுவதையும் குறிக்கும்.

source data automation : ஆதாரத் தரவு தானியக்கம்;மூலத்தரவு தானியங்கி : தரவு பதிவுக்கான தானியங்கும் முறைகளைப் பயன்படுத்துதல். மரபுத் தரவுப் பதிவுமுறைகளில் தேவைப்படும் வேறுபல நடவடிக்கைகளையும், ஆட்களையும், தரவு சாதனங்களையும் குறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு இது உதவுகிறது.

source deck : ஆதார அடுக்கு மூலப்பெட்டி : ஆதாரமொழியில் ஒரு கணினிச் செயல் முறையைக் கொண்டிருக்கிற அட்டை அடுக்கு. இது "பொருள்