பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spaghetti code

1362

spawn


spaghetti code : குழப்பக்யீடு;திருகு முறுகுக் குறிமுறை : ஒரு நிரலின் இயல்பான பாய்வு கெட்டுக் குழப்பத்தில் முடியும் நிலை. பெரும்பாலும் பொருத்தாத, அதிகப்படியான (GOTC) அல்லது JUMP கட்டளைகளைப் பயன்படுத்துவதால் இந்நிலை ஏற்படும்.

spambot : குப்பைசேர்த்தி : 'இணையத்திலுள்ள செய்திக் குழுக்களுக்கு தேவையற்ற செய்திகளையும் கட்டுரைகளையும் ஏராளமாகத் தாமாகவே திரும்பத்திரும்ப அனுப்பி வைக்கும் ஒரு நிரல்.

span : வீச்சளவு : மதிப்பளவுகளின் வீச்சில் மிக உயர்ந்த மதிப்பளவுக்கும் மிகக்குறைந்த மதிப்பளவுக்குமிடையிலான வேறுபாடு.

spanning tree : வீச்சளவு மரம் : இரு பண்புகளைக் கொண்ட ஒரு வரைபடத்தில் உட்படம் (1) அது ஒருமரம்; (2) மூல வரைபடத்தின் அனைத்து மைய முனைகளையும் கொண்டிருக்கும்.

SPARC : ஸ்பார்க் : அடுக்கு நிலை செயலிக் கட்டுமானம் என்று பொருள்படும் Scalable Processor Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நுண்செயலி வரன்முறை. ரிஸ்க் (RISC-Reduced Instruction set Computing-சுருக்க நிரல் தொகுதிக் கணிப்பணி) கட்டுமானத்தின் அடிப்படையில் அமைந்தது.

spare parts : உதிரி பாகங்கள்;மாற்றுக் கருவிகள்.

sparse array : அடர்த்தியற்ற வரிசை;அடர்விலா வரிசை : பெரும்பாலான பதிவுகள் சுழி (பூஜ்யம்) யின் மதிப்பளவைக் கொண்டுள்ள வரிசை.

spatial data management : இடப்பரப்பு தகவல் மேலாண்மை : தரவுகளை எளிதாகப் புரிந்து கொண்டு கையாளும் பொருட்டு, கணினித் திரையில் சின்னங்களை அடுக்கி வைத்திருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட இடப் பரப்பில் தரவுகளைப் பொருள்களின் தொகுதியாக உருவகிக்கும் முறை.

spatial digitizer : இடத்தொடர்பு இலக்கமாக்கி;இடம் சார்ந்த எண் மானமாக்கி : கணினி வரை கலையில் முப்பரிமாணப் பொருள்களை உருவாக்கப்பயன்படுகிற சாதனம்.

spawn : கான் முளை : நடப்புச் செயல்முறையிலிருந்து மற்றொரு செயல்முறையைத் தொடங்குகிறது.