பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spead, transmission

1363

special purpose


spead, transmission : பரப்பு வேகம்.

speaker : ஒலிபெருக்கி.

spec : ஸ்பெக் : 'தனிக்குறிப்பீடு'எனப் பொருள்படும்'Specification'என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.

special character : சிறப்பெழுத்து;சிறப்பு உரு : ஒர் எழுத்தாகவோ இலக்கமாகவோ, வெற்றிடமாகவோ இல்லாத வரைகலை எழுத்து. எடுத்துக் காட்டு கூட்டல் குறியீடு, சமக்குறியீடு, உடுக்குறி, டாலர் குறியீடு, காற்புள்ளி முதலியன.

special function key : சிறப்புப் பணி விரற்கட்டை;சிறப்புச் செயற்பாட்டு விசை : ஒர் எந்திரச் செயற்பணியைக் கட்டுப்படுத்துகிற விசைப்பலகை யிலுள்ள ஒரு விரற்கட்டை. இது, ஒரு குறிப்பிட்ட கணினிச்செயற் பாட்டினைத் தொடங்கி வைக்கிறது.

special interest group (SIG) : தனி நலக் குழுமம்;சிறப்பு ஆர்வக்குழு : ஒர் அமைவனத்தினுள் உள்ள ஒரு தனிக்குழுமம். இது ஒரு தனிப்பொருட் பாடு குறித்தக் கூட்டங்கள் நடத்தும்;கருத்தரங்குகளை நடத்தும்;ஆவணங் களை வெளியிடும். இந்தக் குழுமங்கள் தாங்களே தங்கள் அலுவலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தங்கள் பணிகளை வகுத்துக் கொள்கின்றன. தாங்களே நிதி திரட்டிக் கொள்கின்றன.

special key : சிறப்புச் சாவி.

special libraries association (SLA) : சிறப்பு நூலகச் சங்கம் : நூலகங்கள் மற்றும் தகவல் வல்லுநர்களின் பன்னாட்டு அமைவனம். வங்கிகள் அருங் காட்சியகங்கள், சட்ட நிறுவனங்கள் போன்ற பல்வேறு தனி நலக் குழுமங் களுக்கான ஆதார மையங்களை இது நிறுவுகிறது.

special purpose : சிறப்பு நோக்கம் : முக்கியமான மாறுதல்கள் ஏதுமில் லாமல், ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளுக்கான நோக்கம். இது பொது நோக்கம் என்பதிலிருந்து வேறுபட்டது.

special purpose computer : சிறப்பு நோக்கக் கணினி : சில குறிப்பிட்ட வகைகளிலான எண்ணல் அல்லது தருக்க சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வென்றே உருவாக்கப்பட்ட கணினி. தானியங்கி ஒளிப்படக் கருவி முதல் வீட்டுச் சாதனங்களி