பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


batch processing mode battery படுத்தப்பட்ட பின் திருப்பி அளக்கப்படுகிறது. பயனாளருக்கு எந்திரத்துடன் நேரடி தொடர்பு இல்லை. 2. நீண்ட காலமாக சேர்க்கப்பட்டு வந்த ஒரு தரவுத் தொகுதியையோ அல்லது சம்பளப் பட்டியல், விலைப் பட்டியல் தயாரித்தல் போன்று அடிக்கடி செய்யும் பணிகளையோ செயலாக்கப் படுத்தல்.

batch processing mode : தொகுதி செயலாக்க பாங்கு.


batch programme : தொகுதி நிரல் : உரையாடல் முறையில் நிரல் பிரித்தல் அல்லது அறிக்கை பட்டியலிடல் போன்றவை.

batch session : தொகுதி நிகழ்வு : ஒரு முழுகோப்பையுமே புதுப்பித்தல் அல்லது அனுப்புதல். ஆரம்பம் முதல் கடைசிவரை தடையின்றி நடைபெறுவது Interactive session-க்கு எதிர்ச் சொல்.

batch stream : தொகுதித் தாரை : கணினியில் செயல்படுத்தக் கூடிய தொகுதி நிரல்களின் திரட்டு.

batch system : தொகுதி முறைமை : முன்வரையறுக்கப்பட்ட ஊடாடும் வகையிலோ, நிகழ்நேரத்திலோ இல்லாமல், தொகுதி தொகுதியாகச் செயல்படுத்தும் ஒரு முறைமை.

batch total : தொகுதி முழுமை : தொகுதிக் கூட்டல் : ஒரு பதிவேடுகளின் தொகுதியில் உள்ள வகையுருக் கூட்டங்களின் கூட்டுத் தொகை. தொகுதியுடன் தொடர்புடைய வேலைகளின் துல்லியத்தைச் சோதிக்கப் பயன்படுத்தப்படுவது.

bat file (Batchfile) : பேட் கோப்பு : ஒன்றையடுத்து ஒன்றாக இயக்கப்பட்டு வரும் டாஸ் அல்லது ஒஎஸ்/2 கட்டளைகளின் தொகுதியைக் கொண்ட கோப்பு.

Batten system : பேட்டன் அமைப்பு : டபிள்யு. இ. பேட்டன் கண்டுபிடித்த பட்டியலிடும் முறை. தனி இயல்புகளை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட ஆவணங்களை அடையாளம் கண்டறியப் பயன்படுவது. பீக்-ஏ-பூ என்றும் சிலசமயம் அழைக்கப்படுகிறது. அட்டைகளின் மேல் அட்டைகளை வைத்து துளைகளை ஒப்பிட்டு துளைகளின் ஒற்றுமையைச் சோதித்தறிவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

battery : மின்கலத் தொகுதி : மின்வழங்கி : இரண்டு அல்லது மேற்பட்ட மின் கலன்களை ஒரு கொள்கலனில் கொண்ட தொகுதி. மின்சாரக் கரைசலில் கொள்கலன் இணைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சொந்தக் கணினிகளுக்கு