பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sprocket holes

1369

SSA


பொருந்தி தாளை நகர்த்திச் செல்லும். இதில் பின் செலுத்துகை, இழுவைச் செலுத்துகை என இருவகை உண்டு.

sprocket holes : வழிப்படுத்து துளைகள் : அச்சுப்பொறியில் காகிதத்தை அனுப்புவதற்காக தொடர் எழுதுபொருளின் இரு பக்கங்களிலும் சம இடைவெளியில் துளைகளை இடுவது.

SPX : எஸ்பீஎக்ஸ் : 1. வரிசை முறைப் பொட்டலப் பரிமாற்றம் எனப் பொருள்படும் Sequen. ced Packet Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்/ஒஎஸ்ஐ நான்காம் அடுக்கான போக்குவரத்து அடுக்கில் (Transport Layer) செயல்படும் நெறிமுறை. நாவெல் நெட்வேரில் பயன் படுத்தப்படுகிறது. பொட்டலங்களை அனுப்பிவைக்க, எஸ்பிஎக்ஸ், செய்தி முடிந்துவிட்டதா என்பதை உறுதி செய்கிறது. பொதுவாக எஸ்பீஎக்ஸ்/ ஐபிஎக்ஸ் எனச் சேர்த்தே குறிப்பிடுவர். 2. சில வேளைகளில், ஒரு திசை எனப் பொருள்படும் Simplex என்ற சொல்லின் சுருக்கமாகவும் குறிக்கப்படும்.

square root : எண் வர்க்க மூலம்.

square wave : சதுர அகை : அலைமாணிமூலம் பார்க்கக்கூடிய எண்மானத் துடிப்பின் வரைகலை உருக்காட்சி. இது ஒரு குறிப்பிட்ட பரப்புவரை மிகவேகமாக எழுந்து, துடிப்பின் காலநீட்டிவரை மாறாமல் நின்று, துடிப்பின் முடிவில் வீழ்வதால் சதுர வடிவமாகத் தோன்றுகிறது.

squeezer : ஸ்குவீசர் : பேரளவு ஒருங்கிணைப்பு (எல்எஸ்ஐ) மின்சுற்றை அதன்மூல, பெரிய வடிவில் வடிவமைக்கும் நபர்.

. sr : . எஸ்ஆர் : ஒர் இணைய தளமுகவரி சுரினாம் நாட்டைச் சேர்ந் தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

SRAPI : எஸ்ஆர்ஏபிஐ;ஸ்ரேப்பி : குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப் பொருள்படும் Speech Recognition Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நாவெல், ஐபிஎம், இன்டெல், பிலிப்ஸ் டிக்டேஷன் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு உருவாக்கிய குரலறிதல், உரையினைப் பேச்சாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்பத்துக்கான, பணித்தளம் சாரா பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்.

SSA : எஸ்எஸ்ஏ : நேரியல் சேமிப்பகக் கட்டுமானம் என்று