பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

startup ROM

1376

Statement


startup ROM : தொடக்க ரோம் : கணினியை இயக்கியவுடன் ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தொடக்க இயக்க நிரல்கள் செயல்படுத்தப்படுகின்றன. கணினி தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்ளவும், விசைப்பலகை, வட்டு இயக்ககங்கள் போன்ற சாதனங் களைச் சரிபார்க்கவும் ரோமில் பதியப்பட்டுள்ள நிரல் கூறுகள் உதவு கின்றன. இறுதியில் இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் நிரலை இயக்கும் தூண்டு நிரல்செயல் படுத்தப்படுகிறது.

startup routine : தொடக்க வாலாயம் : கணினியின் பயன்பாடு ஏற்றப்படும்போது நிறை வேற்றப்படும் வாலாயம். இணைவுடைய மென் பொருளைச் சுற்றுச்சூழலுக்குப் பழக்கப்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

startup screen : தொடக்கத்திரை : ஒரு நிரல் இயக்கப்பட்டவுடன் முதன்முதலாகத் தோன்றும் உரை அல்லது வரைகலைக் காட்சித்திரை. தொடக்கத் திரையில் பெரும்பாலும் மென்பொருளின் பதிப்பு, நிறுவன வணிகச் சின்னம் போன்ற தகவல்கள் இடம்பெறும்.

stat : ஸ்டாட் : Statistical or Photostat என்பதன் குறும்பெயர்.

state : நிலை : இரும எணகளைக் குறிப்பிடப் பயன்படும் இருநிலைச் சாதனங்களின் நிலை, சாதனங்கள் பொதுவாக இரண்டு நிலைகளில் மட்டும் இருக்க முடியும். ஒன்று இயங்கு அல்லது நிறுத்து.

stateful : நிலைமைக் கண்காணி : ஒரு கணினி அல்லது செயலாக்கம் தான் பங்குபெறும் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் நுணுக்கமாகக் கண்காணிப்பது. (எ-டு) செய்திகளைக் கையாளுகையில் அவற்றின் உள்ளடக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வது.

stateless : கண்காணிக்காமல்;நிலை கருதாமல் : ஒரு கணினி அல்லது செயலாக்கம் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் கண்காணிக்காமலேயே பங்குபெறுவது. (எ-டு) : செய்தி களைக் கையாளும்போது அவற்றின் மூலம் (source), சேரிடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது. உள்ளடக்கத்தை விட்டுவிடுவது.

statement : கட்டளை;கூற்று : ஒரு நிரலாக்க மொழியில் நிறை