பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

staticizing

1378

stationery


staticizing : பதிவக ஏற்றம் : கணினி சேமிப்பகத்திலிருந்து நிரல் பதிவேடுகளுக்கு நிரலை மாற்றி இயக்கப்படுவதற்குத் தயாராக வைத் திருத்தல்.

static memory : மாறா நிலை நினைவகம் : மின்சாரம் கிடைக்கும்வரை நிரலிடப்பட்ட நிலையிலேயே இருக்கும் நினைவகம். அதைப் புதுப்பிக்க வேண்டியதில்லை. அதற்கு ஒரு கடிகாரமும் தேவையில்லை.

static object : நிலை பொருள்;மாறாப் பொருள்.

static RAM : நிலை ரேம் : இயங்கும் ரேமில் (RAM) இருப்பது போல ஒரு நொடிக்குப் பல தடவைகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையில்லாத நினைவகம். கணினியில் மின் சக்தி இருக்கும்வரை அதன் உள்ளடக்கங்களை இழக்காது. நிலை நினைவக இருப்பிடத்திற்கு கணினி ஒரு மதிப்பை அளித்துவிட்டால், அங்கேயே அது இருக்கும்.

static refresh : நிலை புதுப்பி : மையச் செயலாக்கக் கணினியில் அல்லாமல் தொலைதூர அறிவார்ந்த முகப்பில் தரவுகளைச் செயலாக்கும் முறை. தரவுகளை வேகமாகத் தொகுக்க அனுமதிக்கிறது. ஏனெனில், புரவலர் கணினிக்கும் தொலை, தூர முகப்புக்கும் இடையில் தரவுகளை அனுப்பிப் பெற வேண்டிய தேவையில்லை.

static storage : நிலை இருப்பகம்;நிலை சேமிப்பகம்;நிலை தேக்ககம் : தொடர்ந்து புதுப்பிக்கும் சுழற்சி தேவைப்படாத குறிப்பிட்ட வகையான அரைக் கடத்தி. ஒரு மின்னணு பொத்தானின் நிலையை மாற்றுவதன் மூலம் தரவுகளை வைத்திருக்க முடிகிறது. ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் உள்ள மின்மப் பெருக்கி (flip-flop) ஏற்ற-இறக்க முடையதாகும்.

station : நிலையம் : தரவு செய்தித் தொடர்பு அமைப்பில் உள்ளீடு/வெளியீடுகளில் ஒன்று. பணி நிலையக் கணினி (work station) -க்கு இணைச் சொல்.

station, data : தரவு நிலையம்.

stationery : நிலையாவணம் : ஒருவகை ஆவணம். பயனாளர் இதனைத் திறக்கும்போது ஒரு நகல் எடுக்கப்பட்டு அந்த நகல் ஆவணம் திறக்கப்படும். பயனாளர் அதில் மாறுதல்கள் செய்து வேறுபெயரில் சேமித்துக் கொள்ள

லாம். மூல ஆவணம் எப்போதும் மாறாமல் அப்படியே இருக்கும். நிலையா வணங்களை ஆவண முன்படி