பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stationery, continuous

1379

status codes


வங்களாகவும் அச்சு வார்ப்புருக்களாகவும் பயன்படுத்தலாம்.

stationary, continuous : தொடர் தாள்.

station, work : பணி நிலையம்.

statistical multiplexer : புள்ளியியல் ஒன்றுசேர்ப்பி : தகவல் தொடர்புத் தடங்கள் ஒன்று சேர்ப்புச் சாதனம். இடையகச் சேமிப்புகளைப் பயன்படுத்தி நேரப்பிரிவு ஒன்று சேர்ப்பில் (Time Division Multiplexing) சில அறிவுநுட்பத் தகவல்களைச் சேர்த்து விடும். அதன்பின் ஒரு நுண்செயலி அனுப்புகின்ற தாரைகளை (streams) ஒன்று சேர்த்து ஒற்றைச் சமிக்கையாக மாற்றும். இயங்குநிலையில் இருக்கின்ற அலைக்கற்றையில் இத்தகவலுக்கென ஒதுக்கீடு செய்யும்.

statistics : புள்ளியியல் : தகவல்கள் நிகழ்வு, பகிர்மானம், பரப்பீடு எண்ணளவுகளில் அல்லது வேறுவிதமாக அளவிடும் அறிவியல். புள்ளியியல் பகுப்பாய்வுகளுக்குக் கணினிகள் பெருமளவில் பயன் படுத்தப்படுகின்றன. பல மென்பொருள் பயன்பாடுகள் குறிப்பாகப் புள்ளியியலுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. SPSS மினிடேப், சிஸ்டாட் போன்றவை இதற்கு எடுத்துக் காட்டு. பெரும்பாலான விரி தாள் தொகுதிகள் (20/20, லோட்டஸ் 1-2-3, மைக்ரோ சாஃப்ட் எக்செல், போர்லாண்ட் குவாட்ரோ போன்றவை) பயனுள்ள புள்ளியியல் திறம்பாடுகள் கொண்டவை.

status : தகுதி;தகுநிலை : ஒரு கணினி அமைப்பின் பாகத்தின் தற்போதைய நிலை.

status bar : நிலைமைப் பட்டை : மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் பெரும்பாலான பயன்பாட்டு நிரல்களில் சாளரத்தின் அடிப்பகுதியில் ஒரு பட்டை தென்படும். நிரலின் தற்போதைய நிலையைக் குறிக்கும் செய்தி அதில் தெரிந்து கொண்டிருக்கும். சில நிரல்களில் தற்போது தேர்வு செய்துள்ள பட்டிக் கட்டளைக்கான விளக்கத்தை நிலைமைப் பட்டையில் காணலாம்.

status byte : தகுநிலை எண்மி : ஒரு சாதனத்தின் நடப்புத் தகு நிலையை விவரிக்கும் துணுக்குத் தோரணியைக் கொண்டிருக்கும் நினைவக அமைவிடம்.

status codes : நிலைமைக் குறிமுறைகள் : ஒரு நடவடிக்கையின் முயற்சி வெற்றியா தோல்வியா என்பதைச் சுட்டும்,