பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stepped index

1381

stibitz, George


பதிவு செய்ய மிகமெதுவாகச் செயல்படும் கணினிகள் இந்தச் செயல்முறையைப் பின்பற்றுகின்றன.

stepped index multimode : படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை : ஒரு படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை ஒளியியல் இழையின் அடிப்படைக் கட்டமைவினையும், அதன் கதிர்க் கோட்டக் குறியீட்டுத் தோற்றத்தினையும் படத்தில் காணலாம். இழையின் கதிர்க்கோட்டக் குறியீட்டில் ஏற்படும் திடீர் மாற்றம் உள்மையப் பகுதி எல்லையில் உண்டாகிறது. 2r1 அளவு உள்மைய விட்டம் பொதுவாக 50-60 um அளவுடையது; சில சமயம் இது 200um அளவு கொண்டதாக இருக் கும். 2r2 உள் மைய விட்டம், இயன்ற போதெல்லாம் 125 um அளவில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

stepped motor : ஏற்றிய மோட்டார் : துடிப்பு வருகின்ற குறிப்பிட்ட நேரத்தில் எல்லாம் சுழலுகின்ற எந்திர சாதனம். தட்டு மற்றும் இலக்கணமுறை வரைவிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது.

stepper : காலடி : மரபு நிலை வட்டு இயக்கி என்பதன் ஒரு மாற்றுப் பெயர். படிப்பு/எழுது தலைப்பினை ஒவ்வொரு தடத்தின்மீது மறை முகமான காலடிகள் மூலம் நகர்த்துவதன் வாயி லாக ஒவ்வொரு தரவு சேமிப்புத் தடத்துக்கும் இது அணுகும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

stepper motor : காலடி இயக்குபொறி : குறிப்பிட்ட சிறிய கால அளவுகளில் சுழல்கிற இயக்கு பொறி. வட்டு இயக்கியில் அணுகுகரம் நகர்வதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

step-rate time : நகர் -வீத நேரம் : ஒரு வட்டின் உந்துமுனை ஒரு தடத்திலிருந்து அடுத்த தடத்திற்கு நகர்ந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரம்.

stereolithography : திண்ம வார்ப்பு நுட்பம்.

stereophonic : பலதிசை ஒலி : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வழிகளைப் பயன்படுத்தி ஒலியை உண்டாக்குதல். இது, 'ஒரு திசை ஒலி' என்பதிலிருந்து வேறுபட்டது.

stereo viewing : பலதிசைக் காட்சி;இருதடக் காட்சி.

Stibitz, George : ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ் : தன்னுடைய பகுப்பு எந்திரத்தை வடிவமைக்கும் போது மனித கணினியின்