பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stop

1383

storage circuit


நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அடையாளம் காட்டும் நிரல் தொடர்.

stop : நிறுத்து.

stop bit : நிறுத்தும் துண்மி : 1. ஒரு தரவுச் சொல்லின் இறுதியை அடையாளம் கண்டு தரவுச் சொற்களின் இடையில் உள்ள இடைவெளியை விளக்கும் துண்மி அல்லது துண்மிகளின் தொகுதி. 2. ஒரே நேரத்தில் அல்லாத தொடர் அனுப்புதலின் இறுதியைக் குறிப்பிடும் துண்மி.

stop button : நிறுத்தும் குமிழ் : நிறுத்து பொத்தான்.

stop code : நிறுத்துக் குறியீடு : குறிப்பிட்ட கட்டுப்பாட்டு எழுத்து.

stop line : நிறுத்தக் கோடு : சுட்டி (cursor) உருவம் நிறுத்தும் தேடும் கோடு.

STOP statement : நிறுத்தக்கட்டளை.

storage : சேமிப்பகம் : தேக்ககம்;சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது.

storage allocation : சேமிப்பக ஒதுக்கீடு; தேக்கக ஒதுக்கீடு : கணினி சேமிப்பகத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தகவல்களின் தொகுப்பு மற்றும் குறிப்பிட்ட நிரல் தொடர் பகுதிகளை ஒதுக்கீடு செய்தல். நினைவக ஒதுக்கீடு (Memory allocation) என்றும் சிலசமயம் அழைக்கப் படுகிறது.

storage area : சேமிப்பகப் பரப்பு : தேக்ககப் பரப்பு.

storage area, common : பொதுச் சேமிப்பகப் பரப்பு.

storage block : சேமிப்புத் தொகுதி;தேக்ககப் பகுதி : உள் சேமிப்பகத்தின் தொடர்ச்சிப்பகுதி.

storage, buffer : இடையகச் சேமிப்பு.

storage, bulk : மொத்தச் சேமிப்பு.

storage capacity : சேமிப்புத் திறன்;தேக்கக் கொள்ளளவு : ஒரு சேமிப்பக சாதனம் எத்தனை தரவுகளைச் சேமிக்கும் திறனுடையது என்பது பற்றியது. கணினி துண்மிகளாக கிலோ துண்மி, மெகா துண்மி, பெரும்பாலும் சொல்லப்படுகிறது. அல்லது 'சொல்' என்பார்கள்.

storage circuit : சேமிப்பக மின்சுற்று தேக்கச் சுற்று : 0 அல்லது 1 ஆகிய இரண்டு நிலைகளில் ஒன்றாக பொத்தானிடப்படும் மின்சுற்று.