பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1387


strategic information

1387

streaming tape drive

யும் திரும்ப வரும்போது தெளிவாக எழுதி திரும்பச் செய்யச்செய்தல். நேர்வரிக் குறியீடு அமைத்தால் குறைந்த இயக்க நேரமும் அதிக சேமிப்பக இடமும் (இதற்குச் சமமான லூப் குறியீடு அமைப்பதைவிட) கிடைக்கும். தேவைப்படும் இடமும் ஒரு மாறிலியைத் திரும்பத்திரும்ப பல தடவைகள் குறியீடு அமைப்பதுமே இதனைச் செய்வதில் உள்ள தடைகள்.

strategic information systems : உத்திமிக்க தகவல் அமைப்புகள் : சந்தையால் மற்ற போட்டியாளர்களைவிட ஒரு நிறுவனத்திற்கு உத்தி மூலமான அனுகூலத்தை அளிக்கும் போட்டிப் பொருட்களையும் சேவைகளையும் அளிக்கும் தகவல் அமைப்புகள். வணிக முன்னோடித் தன்மை செயல்பாட்டுத்திற்ன் அதிகரிப்பு மற்றும் ஒரு நிறுவனத்தின் உத்திமிக்க தகவல் மூலாதாரங்களைப் பயன்படுத்துவதையும் இது குறிப்பிடுகிறது.

stream : தாரை; பாயல்.

stream cipher : தாரை மறையெழுத்து : மாறா நீளமுள்ள திறவியைப் பயன்படுத்தி வரம்பிலா நீளமுள்ள தரவு தொடரை மறையாக்கம் செய்யும் வழி முறை.

streamer : தொடரோட்டம் : ஒவ்வொரு தனித்தனி தரவு தொகுதி களுக்கும் இடையில் நின்று துவங்குவதற்குப் பதிலாக தொடர்ச்சியாக அதிகவேகத்தில் இயங்கும் நாடாப் பெட்டி.

streaming : தாரையாக்கம் : காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங்கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக நாடா இயங்கத் தொடங்குவதும் நிற்பதும் மெதுவாக நடைபெறுகிறது. எனினும் இதனால் மிகுந்த நம்பகத் தன்மையான் சேமிப்பும், தரவு பெறுகையும் இயலக் கூடியதாகியுள்ளது. ஏதேனும் ஒரு பயன்பாட்டுக்கு அல்லது கணினிக்கு தொடர்ச்சியாக தரவுகளை வழங்க நேர்ந்தால் இம்முறை மிகவும் உகந்ததாகும்.

streaming audio தாரையோட்டக் கேட்பொலி.

streaming tape drive : நாடா இயக்கி ஓட்டம் : தொடர் நாடா இயக்கியைப்பிடித்துக் கொண்டிருக்கும் பெட்டி நிலைத் தட்டு இயக்கிகளுக்கு மாற்று ஏற்பாடாகவே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.