பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bay

138

BBS


வேலை செய்யும் பித்தளை மனிதன். சொல்லி வைத்ததை எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் செய்யக் கூடியவன்.

bay : வைப்பிடம்; செருகிடம் : ஒரு மின்னணுக் கருவியை ஒர் எந்திரத்தில் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடம் அல்லது செருகுவாய். எடுத்துக்காட்டாக, ஒரு நுண் கணினியின் நிலைப்பெட்டியில் பின்னாளில் கூடுதலாக ஒரு நிலை வட்டினையோ, குறு வட்டகத்தையோ பொருத்துவதற்காக விட்டு வைக்கப்பட்டுள்ள வைப்பிடம்.

bb : பிபி : இணையத்தில், பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

B2C : மின் வணிக (e-commerce) நடைமுறையில் வணிக நிறு வனத்துக்கும் (Business) வாடிக்கையாளருக்கும் (Customer) இடையே நடைபெறும் வணிகத் தகவல் பரிமாற்றங்கள்.

BBC : பிபிசி : இங்கிலாந்து நாட்டு வானொலி நிறுவனம்.

BBட : பிபிஎல் : பிறகு திரும்பி வருவேன் என்று பொருள்படும். Be Back Later என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய அரட்டையில் பங்குபெற்றுள்ள ஒர் உறுப்பினர் தற் காலிகமாக அரட்டையிலிருந்து விலகிப் பிறகு இணைந்துகொள்ள எண்ணும்போது பயன் படுத்தக்கூடிய ஒரு சொல்.

BBS : செய்திப் பலகை அமைப்பு தகவல் பலகை முறைமை : Bulletin Board System என்ற தொடரின் குறும்பெயர். ஒன்று அல்லது மேற்பட்ட இணக்கிகள் அல்லது வேறெந்த பிணைய அணுகுமுறைச் சாதனங்கள் இணைக்கப்பட்ட கணினி அமைப்பு. தொலை துரங்களிலிருந்து தொடர்பு கொள்ளும் பயனாளர்கள் தகவல் மற்றும் செய்திகளைப் பெறுவதற்கு இக்கணினி அமைப்பு உதவுகிறது. இதில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பயன்பாட்டு மென் பொருள்கள் பயனாளர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பயனாளர்கள் தகவல்களைப் படிக்கலாம். தாம் விரும்பும் தகவல்களை பிறரின் பார்வைக்கு வைக்கலாம். பிபிஎஸ் பயனாளர்கள் தமக்குள் மின்னஞ்சல் பரிமாறிக் கொள்ளலாம். அரட்டை (Chat) அடிக்கலாம். கோப்புகளை பதிவேற்றம்/பதி விறக்கம் செய்யலாம். பிபிஎஸ் சேவைகள் கட்டண அடிப்படையிலும் இலவசமாகவும் அமைகின்றன.