பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

style sheet

1393

subdirectory



தரவுகளை உருவாக்குபவர்களுக்கும் இது ஒரு பயனுள்ள குறிப்பாக அமையும்.

style sheet : நடை தாள் : ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு, வேர்டுபர்ஃபக்ட், மற்றும் பேஜ்மேக்கர், வென்ச்சுரா போன்ற டி. டீ. பி தொகுப்பு போன்றவற்றில் நடைதாள்கள் காணப்படுகின்றன. நடைதாள் என்பதில் பத்தியின் தன்மைகளின் அகலம், சாய்வெழுத்துகள், அடிக்கோடு பெரிய, சிறிய எழுத்து உள்தள்ளல்கள் போன்றவை அடங்கியுச்சியான, உடனடியான மாற்றங்கள்ளன. நடைதாளைப் பயன்படுத்துவதன் மூலம் வடிவத்தின் தொடர்ளைச் செய்யமுடியும். வெளி யீட்டில் சீரமைப்பைத் தருவதால் மென்பொருள் நிறுவனங்களிடமும், பெரு நிறுவன பயனீட்டாளர்களிடமும் அவை பிரபலமாக உள்ளன.

stylus : எழுத்தாணி;எழுது கருவி : வரைபட அமைப்பில் பயன் படுத்துவது போன்ற உள்ளீட்டுச் சாதனங்களில் பயன் படுத்தப்படும் எழுதுகோல் வடிவக் கருவி.

எழுது கருவி

எழுது கருவி

stylus printer : எழுத்தணி அச்சுப்பொறி.

. su : . எஸ்யூ : ஒர் இணைய தள் முகவரி முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sub : பகுப்புகள்.

subcommand : துணைக் கட்டளை : ஒரு துணைப் பட்டியில் (submenu) இருக்கும் ஒரு கட்டளை. (ஒர் உயர்நிலைப் பட்டியிலிருந்து ஒரு விருப்பத் தேர்வை தேர்வுசெய்யும்போது கிடைக்கும் இன்னொரு பட்டி துணைப்பட்டி எனப்படும்).

subdirectory : உள் கோப்பகம் : வட்டில் ஒரு பெயரில் கோப்பகம் உருவாக்கப்பட்ட கோப்புகள் சேமித்து வைக்கப்படு