பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subscript

1396

suggestion


subscript : அடியெண் கீழ் எழுத்து;அடிக்குறி : 1. ஒரு அணி அல்லது ஒரு வரிசையைக் கொண்ட சேமிப்பக உறுப்புகளை வரையறை செய்யும் மாறிலியின் பெயருடன் இணைக்கப்படும் முழு எண் மதிப்பு. 2. கணினி அல்லாத அச்செழுத்துகளில் அதே குறியீட்டின் மாறுபாடுகளிலிருந்து வேற்றுமைப்படுத்த ஒரு குறியீட்டின் வலது புறத்திலோ அல்லது கீழோ எழுதப்படும் ஒரு எழுத்து அல்லது இலக்கம். சான்று : 0a 0b (Superscript) மேலொட்டுக்கு எதிர்ச்சொல்.

subscripted variable : எண் வரிசையிட்ட மாறிலி : சிறிய குறியீட்டைத் தொடர்ந்துவரும் வரிசையில் ஏற்படும் எண் மதிப்பின் மாற்றத்தைக் குறிப் பிடும் குறியீடு. சான்று-சதுரங்கம் (2, 4) அல்லது A (7).

subscript mode : குறைத்தமைக்கும் முறை : எழுத்தின் இடத்தில் கீழ்ப் பகுதியால் வழக்கமான உயரத்தைவிடக் குறைந்த உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவு எழுத்துகளை அச்சிடுகிறது.

subset : உட்கணம்;துணைத் தொகுதி : ஒரு தொகுதியின் உள்ளே காணப்படும் வேறொரு தொகுதி.

substitute : பதிலீடு.

substrate : அடித்தளம் : நுண் மின்னணுவியலில், எதன்மீது ஒரு மின்சுற்று உருவாக்கப்படுகின்றதோ அந்தப் பருப்பொருள்.

subtracter : கழிப்பி.

subtraction : கழித்தல்.

substring : துணைச் சரம்;பகுதிச் சரம் : ஒரு எழுத்துச் சரத்தின் பகுதி.

subsystem : துணை அமைப்பு : முதன்மை அமைப்பின் கீழ் இயங்கும் துண்னை அமைவு.

sub task : உட்பணி.

subtract : கழி : உறவுமுறை தரவு தளத்தின் இரண்டாவது கோப்பில் இல்லாத ஒரு கோப்பில் இருக்கும் பதிவேடுகளைக்கொண்டு மூன்றாவது கோப்பினை உருவாக்குதல்.

subtree : கிளைமரம் : மரவுரு தரவுக் கட்டமைப்பில், ஒரு கணுவிலிருந்து கிளைத்துச் செல்லும் கணுக்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு கிளை மர வுருவாகவே தோற்றமளிக்கும்.

successive difference of expression : எண்ணுருக் கோவைகளில் தொடர் வேற்றுமை.

suffix : பின்னொட்டு.

suggestion : கருத்துரை.